Kathir News
Begin typing your search above and press return to search.

அதிமுக மீது பாஜக தொண்டர்கள் கடும் அதிருப்தி - அப்போ கூட்டணி இல்லையா ?

அதிமுக மீது பாஜக தொண்டர்கள் கடும் அதிருப்தி - அப்போ கூட்டணி இல்லையா ?

அதிமுக மீது பாஜக தொண்டர்கள் கடும் அதிருப்தி - அப்போ கூட்டணி இல்லையா ?
X

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  12 Nov 2020 10:14 AM GMT

பாஜகவின் முதற்கட்ட வேல்யாத்திரை நேற்று முன்தினம் ஹோசூரில் முடிவடைந்தது. அடுத்த கட்ட யாத்திரை வரும் 17- ந்தேதி மீண்டும் தொடங்கவுள்ளது. இந்நிலையில் கட்சி மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் நேற்று கட்சி மாநில தலைமையகமான கமலாலயத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் தமிழகத்தில் பாஜகவின் வேல் யாத்திரையை தடுக்க எதிர்கட்சிகளுடன் தமிழக அரசும் கைகோர்த்துள்ளதோ என்ற சந்தேகம் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது என்றார்.

யாத்திரையை தடுக்க எதிர் கட்சிகள் சொன்ன காரணம் கொரோனா பரவிவிடும் என்பதுதான். ஆனால் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் விவசாய மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது கொரோனா எங்கே போனது?

கவர்னர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் முற்றுகை போராட்டம் நடத்தியபோது போலீஸ் எங்கே போனது ? அந்த போராட்டங்களுக்கு போலீசார் அல்லது தமிழக அரசு அனுமதியளித்ததா என்றார் கே.டி.ராகவன்

மேலும், அமைச்சர்கள் செல்கின்ற இடத்தில் ஏகப்பட்ட கூட்டம், முதல்வர் பங்கேற்கும் இடங்களில் எல்லாம் ஏராளமான கூட்டம், அங்கெல்லாம் ஏற்படாத கொரோனா பாஜகவின் ஆன்மீக நிகழ்ச்சியில் மட்டும் ஏற்பட்டுவிட்டதா ? என்றார்.

சென்ற திமுக ஆட்சியில் அப்போதைய அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் பண்ணாரியம்மன் கோவிலில் தீ மிதித்தார். உடனே கருணாநிதி இது காட்டுமிராண்டித்தனம் என்றார்.

சமீபத்தில் மு.க.ஸ்டாலின் ஒரு திருமண நிகழ்ச்சியில் ஹிந்து சம்பிரதாயங்களை கொச்சை படுத்தினார். இப்போது திருமாவளவன் ஹிந்து சம்பிரதயங்களையும், தெய்வங்களையும், ஹிந்து பெண்களையும் கொச்சைப் படுத்துகிறார்

இதை எல்லாம் தமிழகத்தில் எந்த கட்சியாவது கேட்கிறதா.. பாஜக மட்டுமே தட்டிக் கேட்கிறது என்றார். பாஜக கேட்டால் அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைக்காதீர்கள் என்கிறார்கள்.. ஆனால் இவர்கள் மட்டும் ஆன்மீக விஷயங்களில் தலையிட்டு சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கொச்சை படுத்துவார்கள்.. இதை எல்லாம் கேட்டால் பாஜக மதவாதி என்பார்கள்.

டாஸ்மாக்கை திறக்கலாம்.. நேரத்தை நீடிக்கலாம்... தியேட்டரை திறக்கலாம்..ஆனால் பாஜககாரன் நிகழ்ச்சி நடத்தினால் மட்டும் கொரோனா பரவி விடுமா ?

ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மாநிலத்தலைவர் செல்லும் வழியில் தொண்டர்கள் கை அசைத்தால் கூட அந்த தொண்டர்களை கைது செய்வதா ? தேவையற்ற முறையில் இந்த அரசு பாஜக தொண்டர்கள் நிர்வாகிகளை எங்கு பார்த்தாலும் கைது செய்கிறது.

காஞ்சீபுரத்தில் கோவிலுக்கு சென்ற பாஜக பக்தரை அங்கு வைத்து கைது செய்கிறார்கள், வெளியில் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தொண்டர் ஒருவரை அவரது காரில் பாஜக கொடி இருந்தது என்பதற்காக கைது செய்கிறார்கள். யாத்திரையில் பங்கேற்று திரும்பி செங்கல்பட்டு சென்று கொண்டிருந்த பெண் நிர்வாகியை கைது செய்கிறார்கள்.

இதற்கு காரணம் என்ன ?தமிழக அரசு மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது?

நியாயமான கேள்விக்கு பதில் இல்லை. அதிமுக ஏதோ ஒரு திட்டத்தை பாஜகவுக்கு எதிராக மனதில் வைத்து செயல்படுவதாக பாஜக தொண்டர்கள் நினைக்கிறார்கள். குறிப்பாக சொல்லப்போனால் தொண்டர்கள் அதிமுக மீது அதிருப்தியில் உள்ளனர்.

நீங்கள் என்ன செய்தலும் சரி தொடர்ந்து வேல் யாத்திரை நடக்கும்..தடையை மீறி நடக்கும், அடுத்த மாதம் 6- ந்தேதி யாத்திரை இறுதி நாளில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்பார்.. இவ்வாறு கே.டி.ராகவன் கூறினார்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News