Kathir News
Begin typing your search above and press return to search.

ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க தீர்மானம் நிறைவேற்றிய டெல்லி காங்கிரஸ்: பா.ஜ.க தொண்டர்கள் மகிழ்ச்சி!

ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க தீர்மானம் நிறைவேற்றிய டெல்லி காங்கிரஸ்: பா.ஜ.க தொண்டர்கள் மகிழ்ச்சி!

ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க தீர்மானம் நிறைவேற்றிய டெல்லி காங்கிரஸ்: பா.ஜ.க தொண்டர்கள் மகிழ்ச்சி!
X

Saffron MomBy : Saffron Mom

  |  1 Feb 2021 7:17 AM GMT

பா.ஜ.க தொண்டர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு செய்தியாக, ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்குவதற்காக ஒரு தீர்மானத்தை டெல்லி காங்கிரஸ் குழு ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றியது. தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர், டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி, "ராகுல் ஜி மட்டுமே காங்கிரஸ் தொண்டர்களை ஊக்குவிக்க முடியும். விவசாயிகள் பிரச்சினை முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பாதிப்புகள் வரை அவரது கணிப்புகள் அனைத்தும் நிறைவேறி வருகின்றன. அவர் தனது தலைமையைக் காட்டியுள்ளார் எனவே அவரை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க தீர்மானத்தை நிறைவேற்றினோம். "

வங்காளம், தமிழ்நாடு உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்களில் தேர்தல்கள் முடிந்த பின்னர் ஜூன் மாதத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்ட சில நாட்களில் இந்தத் தீர்மானம் வந்துள்ளது.

மக்களவை தேர்தலில் கட்சி தோல்வியை சந்தித்ததையடுத்து, வயநாட்டைச் சேர்ந்த எம்.பி.யான ராகுல் காந்தி, 2019 ல் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அன்றிலிருந்து கட்சியின் தலைவராக மீண்டும் வரக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ராகுல் பதவி விலகியதிலிருந்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றார் அவரது தாயார் சோனியா காந்தி.

கடந்த டிசம்பர் மாதம், கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா, காங்கிரசில் 99.9 சதவீத தொண்டர்கள் ராகுல் காந்தி தங்கள் தலைவராக விரும்புகிறார்கள் என்று கூறியிருந்தனர், மேலும் கட்சி புதிய கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையை விரைவில் தொடங்கும் என்றும் கூறினார்.

"கட்சி ஒரு புதிய கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையை விரைவில் தொடங்கும். காங்கிரஸின் தேர்தல் கல்லூரி, ஏ.ஐ.சி.சி உறுப்பினர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமைக்கு யார் மிகவும் பொருத்தமானவர்கள் என்பதைத் தேர்ந்தெடுப்பார்கள். நான் உட்பட 99.9 சதவீதம் பேர் ராகுல் காந்தி கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிரோம்” என்று ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்திருந்தார்.

கடந்த ஆகஸ்டில், சில முன்னாள் அமைச்சர்கள் உட்பட சுமார் 12 காங்கிரஸ் தலைவர்கள் கட்சியின் நிறுவன கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைக்கவும், தலைமைத்துவ மாற்றங்களுக்காகவும் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர். ராகுலுடன் நெருங்கிய சிலர் அவர் தான் காங்கிரஸ் தலைமைக்கு திரும்ப வேண்டும் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News