Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க VS திரிணாமுல் காங்கிரஸ் - 200  தொகுதிகளை  கைப்பற்ற அமித்ஷாவின்  அதிரடி திட்டம்.!

பா.ஜ.க VS திரிணாமுல் காங்கிரஸ் - 200  தொகுதிகளை  கைப்பற்ற அமித்ஷாவின்  அதிரடி திட்டம்.!

பா.ஜ.க VS திரிணாமுல் காங்கிரஸ் - 200  தொகுதிகளை  கைப்பற்ற அமித்ஷாவின்  அதிரடி திட்டம்.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 Nov 2020 10:21 PM IST

2010ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்தபோது மக்கள் மம்தா பானர்ஜியை நம்பினார்கள். ஆனால் இப்போது எதிர்வரும் தேர்தலில் மக்கள் பா.ஜ.க.வை எதிர்பார்க்கிறார்கள். மேலும் "பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், பா.ஜ.க.வை ஆதரித்து வாக்களித்து வெற்றிபெற வைத்தால் மேற்கு வங்காள மாநிலத்தை தங்கமாக மாற்றுவோம்" என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று மேற்கு வங்காள பிரச்சார சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட பொழுது கூறினார்.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் இம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அங்கு போட்டியிட்ட பா.ஜ.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் தோல்வியை தழுவியது. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் 42 தொகுதிகளில், 18 தொகுதிகளை அதிரடியாக கைப்பற்றிய பா.ஜ.க மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.

இந்நிலையில் அங்கு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அங்குள்ள மொத்தம் 294 சட்டமன்ற தொகுதிகளில், 200 தொகுதிகளை கைப்பற்றுவது என்ற முடிவோடு தற்போது பா.ஜ.க களமிறங்கியுள்ளது. இந்நிலையில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய அமைச்சரும், பாஜ.க மூத்த தலைவருமான அமித்ஷா மேற்கு வங்கத்தில் மேற்கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது அவர் கூறுகையில்,"மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. இதுவரை காங்கிரசுக்கும், இடதுசாரிகளுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் மேற்கு வங்க மக்கள் ஒரு வாய்ப்பு கொடுத்தார்கள். அதுபோல பா.ஜ.க வுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். அப்படி நீங்கள் வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் வங்கத்தை தங்கமாக மாற்றுவோம். மேற்கு வங்க மாநிலத்தில் எல்லையில் நடக்கும் ஊடுருவல்களை தடுத்து பாதுகாப்பானதாக மாற்றுவோம்.

மேலும், தங்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்று மேற்கு வங்க மக்கள் மம்தா பானர்ஜி மீது கோபமாக உள்ளார்கள். மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட வெள்ளம், கொரோனா போன்றவற்றை பயன்படுத்தி திரிணாமுல் காங்கிரஸ் நிவாரணம் என்ற பெயரில் ஊழல் செய்துள்ளது. ஆனால் அதை நினைத்து மம்தா பானர்ஜி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. மொத்தத்தில் அவர் வாக்கு அரசியலை மையமாகக் கொண்டு செயல்படுகிறார். அதன் காரணமாக கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 100 பா.ஜ.க தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரை அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. மொத்தத்தில் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் மம்தா பானர்ஜி முடக்கி வைத்துள்ளார் என அமித்ஷா சரமாரியாக குற்றம் சாட்டி தன்னுடைய உரையை நிறைவு செய்தார்".

Next Story
கதிர் தொகுப்பு
Trending News