தமிழகத்தில் 2026'ல் பா.ஜ.க கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் - அண்ணாமலை சவால்
திராவிட முன்னேற்றக் கழகம் என்பது பெரிய வெங்காயத்தை போன்றது உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

By : Mohan Raj
திராவிட முன்னேற்றக் கழகம் என்பது பெரிய வெங்காயத்தை போன்றது உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை மைலாப்பூரில் நடைபெற்ற திராவிட மாயை என்கிற புத்தகத்தின் ஆங்கில பதிப்பு வெளியீட்டு விழாவில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, 'திராவிடம் என்பது குழப்பம் நிறைந்த ஒன்று! தி.மு.க தொடங்கப்பட்டது குழப்பத்தில் தான், கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் அரசியலுக்கு வந்து இருந்து பார்த்து வருகிறேன் திராவிட ஆட்சி ஒரு கூடாரத்தை போன்று செயல்பட்டு வருகிறது.
2019'ம் ஆண்டு தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி தமிழ்நாட்டில் தீண்டாமையில் திருவாரூர் மாவட்டம் தான் முதலில் உள்ளது. தமிழ்நாட்டில் பதிவான 627 தீண்டாமை வழக்குகளில் 158 திருவாரூரில் பதிவானவை சாதி அடிப்படையில் தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் குறையாமல் நடந்து கொண்டிருக்கின்றன.
தி.மு.க'வில் 260 நபர்கள் மேல்மட்டத்தில் உள்ளனர் அவர்களை வீழ்த்திவிட்டால் தி.மு.க'வில் தனது வீழ்த்துவது பெரிய காரியமில்லை, தி.மு.க'வும் பெரிய வெங்காயம் ஒன்று அதனை உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது. திமுக அமைச்சர்கள் சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள். தொடக்க காலத்தில் திராவிட தலைவர்கள் சித்தாந்தத்தை உருவாக்கியது போல தற்போது அக்கட்சி செயல்படுகிறது' என்றார்.
'2024 ஆம் ஆண்டு ஒரு மைல்கல்லாக இருக்கப் போகிறது அந்த ஆண்டு பா.ஜ.க'வை நோக்கி மக்கள் வெள்ளம் போல் வரவுள்ளனர். 2020 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பா.ஜ.க கண்டிப்பாக ஆட்சியமைக்கும் அதை யாரும் தடுக்க முடியாது என்றார் பா.ஜ.க' தலைவர் அண்ணாமலை.
