Kathir News
Begin typing your search above and press return to search.

இலவச வேட்டி,சேலை டெண்டர் தாமதமானால் பா.ஜ.க போராடும் - தி.மு.க அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இலவச வேட்டி,சேலை டெண்டர் தாமதமானால் பா.ஜ.க போராடும் என்று அறிவித்துள்ளார்

இலவச வேட்டி,சேலை டெண்டர் தாமதமானால் பா.ஜ.க போராடும் - தி.மு.க அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

KarthigaBy : Karthiga

  |  8 Aug 2022 7:45 AM GMT


பா.ஜ.க மாநில தலைவர் கே.அண்ணாமலை நேற்று கூறியிருப்பதாவது:-

நாட்டின் வளர்ச்சியில் கைத்தறி நெசவாளர்களின் பங்களிப்பை கவுரசிக்கும் விதத்ததில் 2015ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக நம் தேசம் கொண்டாடி வருகிறது.

கைத்தறியின் ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான வளர்ச்சி மற்றும் கைத்தறி நெசவாளர்களின் நலனை உருவாக்க தேசிய கைத்தறி மேம்பாட்டு திட்டம் செயல்பாட்டில் உள்ளது கைத்தறி உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில் நூல் வாங்கும்போது விதிக்கப்படும் சரக்கு கட்டணத்தை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக் கொள்கிறது. மேலும் பருத்தி பட்டு கம்பளி போன்ற நூல் வகைகளுக்கு 15 சதவீத மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. கைத்தறி மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் தங்களது உற்பத்தியை உயர்ந்த தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூபாய் 7 கோடியே 84 லட்சம் வழங்கி உள்ளது.

திமுக அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் நெசவு தொழிலாளர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. கோவை மற்றும் திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்கள் 59 நாட்கள் போராட்டம் நடத்திய பின்னர்தான் நெசவுக்கு கூலி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

நெசவாளர்கள் வாழ்வுரிமை என இலவச வேட்டி சேலை திட்டத்தை மூடுவிழா நடத்த இந்த அரசு திட்டமிட்டுள்ளது. 1 கோடி 80 லட்சம் சேலைகளும், 1 கோடி 80 லட்சம் வேட்டிகளும் நெய்வதற்கு விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட நூலின் கொள்முதலுக்கான டெண்டர்களை இன்றுவரை கொடுக்காமல் இழுத்தடுக்கிறது.இப்போது டெண்டர் கொடுப்பதில் தாமதம் ஆவதால் நெசவாளர்களுக்கு.ரூ.486 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


எனவே இந்த டெண்டரை வழங்கவில்லை என்றால் நெசவாளர்களின் சார்பாக தமிழக பா.ஜ.க மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.







Next Story
கதிர் தொகுப்பு
Trending News