Kathir News
Begin typing your search above and press return to search.

'இனி தமிழ்நாட்டில் பா.ஜ.க தான், தி.மு.க'வின் அரசியல் அஸ்தமனம் தொடங்கிவிட்டது' - சூர்யா உறுதி

தி,மு.க'வில் இருந்து பா.ஜ.க'வில் இணைபவர்கள் எண்ணிக்கை இனி அதிகரிக்கும் என சமீபத்தில் பா.ஜ.க'வில் இணைந்த தி.மு.க எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா கூறியுள்ளார்.

இனி தமிழ்நாட்டில் பா.ஜ.க தான், தி.மு.கவின் அரசியல் அஸ்தமனம் தொடங்கிவிட்டது - சூர்யா உறுதி
X

Mohan RajBy : Mohan Raj

  |  11 May 2022 11:00 AM GMT

தி,மு.க'வில் இருந்து பா.ஜ.க'வில் இணைபவர்கள் எண்ணிக்கை இனி அதிகரிக்கும் என சமீபத்தில் பா.ஜ.க'வில் இணைந்த தி.மு.க எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா கூறியுள்ளார்.

தி.மு.க'வில் இருந்து சமீபத்தில் எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா பா.ஜ.க'வில் இணைந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காலம்காலமாக தி.மு.க'வில் உழைத்த ஒரு மூத்த தலைவரின் மகனே தி.மு.க கட்சியின் செயல்பாடுகள் பிடிக்காமல் அங்கிருந்து விலகி தேசிய கட்சியான பா.ஜ.கவின் இணைந்தது இதர பல கட்சிகளாலும் இன்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தி.மு.க'வில் குடும்ப அரசியல் ஆதிக்கம் அதிகமாகிறது, அதே நேரத்தில் மத வேற்றுமை பார்க்கின்றனர், ஜாதி பார்க்கின்றனர் என பல்வேறு விஷயங்களை தனியார் பத்திரிக்கை அளித்த பேட்டி ஒன்று ஒன்றில் சூர்யா விவரமாக கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, 'கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க'வில் பணியாற்றி வருகிறேன், கடினமாக உழைத்து இருக்கிறேன் ஆனால் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு எல்லாம் உடனுக்குடன் உயர்ந்த பதவிகள் அங்கீகாரம் வழங்கப்படுகிறது எனது தந்தையின் சார்பில் இருந்து எனக்கு எந்த உதவியும் இல்லை எனவே கனிமொழியின் ஆதரவாளராக இருந்தால் கட்சிகள் முன்னேறலாம் என அவருடன் இருந்து வந்தேன் ஆனால் அவரையே தற்பொழுது ஓரங்கட்டும் படலம் கட்சிக்குள் நடந்து வருகிறது, இதனால் வெறுத்துப் போய் பா.ஜ.க'வில் சேர்ந்து இருக்கிறேன். தி.மு.க அதிகார மையமாக இப்போது உதயநிதி, சபரீசன் மட்டுமே உருவாகி வருகின்றனர். மேலும் தி.மு.க'வில் தற்போது உதயநிதி, சபரீசன், கனிமொழி என்ற முக்கோணத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது' என்றார்.

மேலும் பேசிய அவர், 'இந்த குடும்ப அரசியலின் காரணமாக கட்சிக்காரர்கள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கனிமொழி ஓர் அணியாகவும், சபரீசன் தனி அணியாகவும், அன்பில் மகேஷ் உடன் சேர்ந்துகொண்டு உதயநிதி ஒரு அணியாகவும் கட்சியில் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். தி.மு.க என்ற கட்சியை பொறுத்த வரை முக்கோணத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் சமாளிக்க முடியாமல் ஸ்டாலின் தவித்து வருகிறார். ஒரு கட்சிக்கான தோல்வி என்பது வாக்காளர்களால் மட்டுமல்ல கட்சியில் உள்ள நிர்வாகிகள் நடவடிக்கைகளும் தீர்மானிக்கப்படுகிறது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கை கண்டு எவ்வளவு கொந்தளித்தார்கள் ஆனால் தி.மு.க'வில் உள்ள பாலியல் புகார் தொடர்பாக அவர்கள் கண்டு கொள்ளவில்லையே! திருச்சி சிவா, பெரியகருப்பன் உள்ளிட்டவர்கள் மீது பாலியல் புகார்கள் ஆதாரத்தோடு வெளியானது ஆனால் அதற்குப் பின்னால் அவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்க்கிறார்கள். ஆனால் பா.ஜ.க'வின் பாலியல் புகாருக்கு உள்ளான சிலரது பதவிகள் பறிக்கப்பட்டு இருக்கிறது அவர்கள் அனைவரும் டம்மியாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதேபோல் கட்சியில் செயல்படாத அவர்களை நீக்கி உழைப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நான் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து விட்டதால் என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார் என் தந்தை, திராவிடமும் மதச்சார்பின்மை பேசும் எனது தந்தையால் நான் மதம் மாறி திருமணம் செய்து கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை இப்படி அவர் ஒரு இரட்டை வேடம் போடுகிறார்.

நான் கடந்த சில மாதங்களாகவே பா.ஜ.க'வில் இணைய போவதாக தகவல்கள் வெளியானது, இதைக்கேட்ட பா.ஜ.க'வினர் என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசினார்கள். என்னை மிகவும் மரியாதையாக நடத்தினார்கள் அதை ஏற்று அவர்கள் கட்சியில் சேர்ந்து இருக்கிறேன். நான் திருச்சி சிவா மகன் என்ற அடையாளத்தை அழித்து விட்டேன் நான் பா.ஜ.க'விற்கு சென்று இருப்பதை கேள்விப்பட்டு தி.மு.க முன்னாள் வனத்துறை அமைச்சர் செல்வராஜ் மகன் கருணைராஜா என்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்றார் முதலில் நான் செல்கிறேன் பிறகு உன்னை அழைத்துச் செல்கிறேன் என சொன்னேன். தி.மு.க'வில் இருந்து பா.ஜ.க'வில் இணைபவர்கள் எண்ணிக்கை இனி அதிகரிக்கும்' அதிகரிக்கும் என கூறியுள்ளார்.

இறுதியாக, 'இனி தமிழ்நாட்டில் பா.ஜ.க தான் நிற்கும், தி.மு.க'வின் அரசியல் அஸ்தமனம் தொடங்கிவிட்டது' என சூர்யா கூறினார்.


Source - Asianet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News