துணை முதலமைச்சர் தாயாரிடம் ஆசி வாங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!
தேனி மாவட்டத்தில் உள்ள போடி நாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
By : Thangavelu
தேனியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயாரை முதலமைச்சர் சந்தித்து ஆசி வாங்கியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள போடி நாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது எதிர்த்து நிற்கும் திமுக வேட்பாளர் தங்கச்தமிழ்செல்வன், அதிமுகவிற்கு துரோகம் இழைத்தவர் அவரை மக்கள் நிராகரிப்பார்கள் என பேசினார்.
இதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றிருந்தார். அப்போது ஓபிஎஸ் தாயாரிடம் முதலமைச்சர் ஆசி வாங்கினார். ஓபிஎஸ் தாயார் முதலமைச்சருக்கு திருநீர் பூசினார். இந்த புகைப்படங்களை ஓபிஎஸ் இளைய மகன் பிரதீப் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
எனது அப்பத்தா பாசத்திற்குரிய ஓ.பழனியம்மாள் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆகியோரை வாழ்த்தி ஆசீர்வாதங்களை வழங்கினார். தற்போது ஓபிஎஸ் தாயாரிடம் ஆசி வாங்கிய முதலமைச்சரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு காரணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை திமுக எம்.பி. ராசா மிகவும் தகாத வார்த்தையால் பேசியதே ஆகும். முதலமைச்சரின் தாய் மறைந்து போனாலும், தமிழகத்தில் லட்சக்கணக்கான தாய் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆசிர்வாதங்கள் வழங்கி வருவார்கள் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.