வேளாங்கண்ணியில் ஆசீர்வாதம், நாகூரில் துவா - இறங்கி அடிக்கும் முதல்வர் எடப்பாடி.!
வேளாங்கண்ணியில் ஆசீர்வாதம், நாகூரில் துவா - இறங்கி அடிக்கும் முதல்வர் எடப்பாடி.!
By : Mohan Raj
தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மழை சேதங்களை பார்வையிடுகிறார். இந்த சுற்றுப்பயணத்தின் நடுவில் சிறுபான்மையினரின் தலங்களாக வரும் நாகூர் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய தலங்களில் வணங்கி சிறுபான்மையினரின் நண்பன் என இமேஜை மேம்படுத்தவது தி.மு.க தலைவர் ஸ்டாலினை முந்துவது போல் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
தி.மு.க தலைவர் ஸ்டாலினை எடுத்துக்கொண்டால் மக்களுக்கு நன்மை தரும் விஷயங்களை முன்னெடுக்கிறாரோ இல்லையோ மக்களுடன் இருப்பது, சிறுபான்மையினருக்கு உதவுவது என வரிசையாக புகைப்படங்களை தனது இணைய கூலிகள் மூலம் சமூக வலைதளத்தில் உலா வருமாறு பார்த்துக்கொள்வார். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு தி.மு.க'வை விட்டால் வேறு ஆள் இல்லை என்பது போன்ற தோற்றத்தை அந்த புகைப்படங்கள் மூலமும், தனது கருத்துக்கள் மூலமும் வெளிப்படுத்த முயல்வார்.
ஆனால் சமீப காலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க தலைவர் ஸ்டாலினை ஓரம்கட்டும் அளவிற்கு களத்தில் இறங்கி அடிக்க ஆரமித்துள்ளார். கடந்த நிவர் புயலின் போது ஸ்டாலின் ஆள் வைத்து குடை பிடித்து நடந்த சமயத்தில் முதல்வராகிய எடப்பாடி பழனிசாமி தானே குடைபிடித்து நடந்து ஸ்டாலினை ஓரம்கட்டினார்.
அதேபோல் இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட சுற்றுப்பயணத்தில் வேளாங்கண்ணி பேராயரிடம் ஆசீர்வாதம், நாகூர் தர்கா'வில் குல்லா போட்டு 'துவா' செய்தல் என எடப்பாடி இறங்கி அடிக்க துவங்கியுள்ளார்.
ஏற்கனவே ஸ்டாலின் தலைமை மீது சந்தேகம், இவர் தி.மு.க தலைமைக்கு பொருத்தமானவரா? அல்லது கருணாநிதி மகன் என்ற ஒரு காரணத்தினால் தி.மு.க'வை பலி கொடுத்துவிட்டோமா என உடன்பிறப்புகளே சந்தேகத்தில் இருக்கும் போது எடப்பாடியாரின் இந்த செய்கைகளால் ஸ்டாலினை ஓரம்கட்டுவது ஸ்டாலினுக்கு மீதமுள்ள கொஞ்சம் பெயரையும் எடப்பாடி பறித்துக்கொள்வார் என்றே தோன்றுகிறது.