Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக குக் கிராமத்தில் பட்டியலின நிர்வாகி வீட்டில் காலை உணவு - தமிழகம் வந்து சமூகநீதி வகுப்பெடுத்த ஜே.பி.நட்டா

பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி வீட்டில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பா.ஜ.க'வின் முக்கிய தலைவர்கள் உணவருந்திய நிகழ்வு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

தமிழக குக் கிராமத்தில் பட்டியலின நிர்வாகி வீட்டில் காலை உணவு - தமிழகம் வந்து சமூகநீதி வகுப்பெடுத்த ஜே.பி.நட்டா

Mohan RajBy : Mohan Raj

  |  23 Sep 2022 12:23 PM GMT

பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி வீட்டில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பா.ஜ.க'வின் முக்கிய தலைவர்கள் உணவருந்திய நிகழ்வு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று காலை பிள்ளையார்பட்டியில் ஸ்ரீ கற்ப விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் அதனை தொடர்ந்து காரைக்குடி அருகே உள்ள நெசவாளர் பட்டியலின வகுப்பைச் சார்ந்த பா.ஜ.க சாக்கோட்டை தெற்கு ஒன்றிய தலைவர் ராமலிங்கம் வீட்டில் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் காலை உணவு அருந்தினார்.

அந்த சமயத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, சி.டி.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பா.ஜ.க'வின் தேசிய தலைவர் தமிழகத்தில் உள்ள குக் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு சென்று உணவு அருந்தியது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News