"வீட்டை எழுதி தர்றியா இல்லையா?" என மிரட்டும் தி.மு.க எம்.எல்.ஏ'வும் அவரது ஒட்டுனரும் !
DMK M.L.A atrocities.

வீட்டை எழுதி தர்றியா இல்லையா? என தி.மு.க எம்.எல்.ஏ'வும், அவரது கார் ஓட்டுநரும் மிரட்டுவதாக சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சோழிங்கநல்லூரை சேர்ந்த உஷா என்பவர் புகார் ஒன்றை அளித்துவிட்டு வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "சோழிங்க நல்லூரில் சமையல் வேலை செய்து கடந்த 2014 ஆம் ஆண்டு சோழிங்க நல்லூர் கிராம நெடுஞ்சாலை பகுதியில் 700 சதுர அடி கொண்ட நிலத்தை வாங்கி வீடு ஒன்றை கட்டி குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாகவும், கடந்த 2008 ஆம் ஆண்டு ராஜா என்பவர் தனது வீட்டிற்கு அருகே வீடு கட்டி குடியேறியதாகவும், ராஜா சோழிங்கநல்லூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான அரவிந்த் ரமேஷின் கார் ஓட்டுனர் என்பதால் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தனது வீட்டை மலிவான விலையில் எழுதி கொடுக்குமாறு அடியாட்களை வைத்து தகராறில் ஈடுபட்டு வருவதாகவும் செய்தியாளர்களிடம் உஷா தெரிவித்துள்ளார்.
மேலும் எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ் அடியாட்களுடன் தனது வீட்டிற்கு வந்து ராஜாவிற்கு வீட்டை எழுதி கொடு இல்லையென்றால் நாங்களே பறித்து கொள்வோம் எனவும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் எடப்பாடி யாரிடம் வேண்டுமானாலும் புகார் அளித்துகொள் என தன்னை மிரட்டிவிட்டு சென்றதாக அவர் கூறினார். இது குறித்து செம்மெஞ்சேரி காவல் நிலையத்தில் 12 முறையும், காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு முறை புகார் அளித்தும் எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார். இதனால் தன் வீட்டை காப்பாற்ற மீண்டும் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார்.