"வாழும் எம்.ஜி.ஆர் உதயநிதி" என்கிற ரீதியில் சட்டசபையில் தூக்கலாக துதிபாடும் தி.மு.க உறுப்பினர்கள்.
Breaking News.
By : Mohan Raj
மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் துதி பாடல்களை பாடத் துவங்கும் தி.மு.க கட்சியினர்.
கடந்த 200'ம் ஆண்டு முதல் 2011'ம் ஆண்டு வரையிலான ஆட்சியில் தி.மு.க'வின் நிகழ்வுகளை பட்டியலிட்டால் அதில் அதிகபட்சம் பாராட்டு விழாக்களே மிஞ்சும். கருணாநிதியை நடுநாயகமாக உட்கார வைத்துகொண்டு "பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா" என துதி பாடுவதை முழுநேர பணியாக தி.மு.க'வினர் ஆட்சிகாலத்தில் நிறைவேற்றினர். இதில் திரைத்துரையினர் மட்டுமின்றி தி.மு.க கட்சியினரும் அடக்கம். இந்த ஒரு காரணம் கூட தி.மு.க அடுத்த பத்து ஆண்டுகள் ஆட்சியில் அமர முடியாது போன முக்கிய காரணம்.
ஆனால் இதையே திரும்ப ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க மீண்டும் பின்பற்ற துவங்கிவிட்டது. கடந்த வாரம் சட்டசபையில் துரைமுருகனை நடுநாயகமாக வைத்து "துரைமுருகன்'தான் எல்லாமே என்கிற ரீதியில் பாராட்டுவிழாவை சட்டசபையில் எடுத்தனர்.
அதுபோலவே இரு தினங்கள் முன் 'ஒட்டு மொத்த நாட்டிற்கும் வழிகாட்டியாக முதலமைச்சரின் திட்டங்கள் இருப்பதால் பிரதமராகும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது' என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தன் பொறுப்பை உணர்ந்து துதி பாடினார்.
இந்த வரிசையில் இன்று சட்டப்பேரவையில் மீண்டும் துதி பாடலை துவங்கியுள்ளது தி.மு.க, இன்று ஏ.வ வேலு அவர்கள் பாடிய துதியில்
"திரையுலகில் இருந்து வந்த எம்.ஜி.ஆர் சட்டமன்ற உறுப்பினராகி முதல்வராகினார், தொடர்ந்து மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனார். அந்த வரிசையில் தான் தம்பி உதயநிதி சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகியுள்ளார்" சற்று தூக்கலாகவே பாடினார்.
அடுத்த ஒரு சமயத்தில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் பாடிய துதியில், "எம்.ஜி.ஆர். பிரசாரத்திற்கு வரும் போது குழந்தைகளுடன் மக்கள் 3 நாட்கள் காத்திருப்பார்கள்; அதே போல் உதயநிதிக்காக மக்கள் காத்திருந்தனர்" என துதி பாடினார் திருவையாறு எம்.எல்.ஏ.
இவ்வளவிற்கும் தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான் ஸ்டாலின் "சட்ட முன்வடிவு, கேள்வி நேரத்தில் தலைவர்களை பாராட்டி பேசக்கூடாது" என அறிவித்திருந்தாலும் அவரது பேச்சை மதியாமல் தி.மு.க எம்.எல்.ஏ'க்கக் துதி பாடலை விடாமல் பாடி சட்டசபை நேரத்தை வீணடித்து வருகின்றனர்.