திருமணத்திற்கு மறுத்த பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து பரப்பிய சிறுத்தை குட்டி !
Top Story

By : Mohan Raj
பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து அவதூறு பரப்பிய சிறுத்தைகுட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம், நாஞ்சிகோட்டை அருகே உள்ளது மறியல். இங்கு தஞ்சை மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சட்டமன்ற தொகுதி செயலாளராக இருந்து வருகிறார் 41 வயதான அறிவுடைநம்பி, இவர் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.
இந்நிலையில் அறிவுடைநம்பி வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளலாம் என கடலூரை சேர்ந்த 28 வயது பெண்ணை திருமண நிச்சயம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் அறிவுடைநம்பிக்கு பல பெண்களுடன் தவறான தொடர்பு இருப்பதை அறிந்து கொண்டார். இதனையடுத்து அவர் அவரோடு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டார்.
இதனால் ஆத்திரத்தை அடக்க முடியாத வி.சி.க தொகுதி செயலாளர் அறிவுடைநம்பி அந்தப் பெண்ணின் முகத்தை ஆபாசமான புகைப்படங்களோடு இணைத்து மார்பிங் செய்து இருக்கிறார். அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டிருக்கிறார். இதனை அறிந்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்து உடனடியாக கடந்த ஜூலை மாதம் இதுகுறித்து போலீசில் புகார் அளித்திருக்கிறார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை செய்து வந்துள்ளனர். விசாரணைக்காக அறிவுடைநம்பியையும் தேடி வந்துள்ளனர். ஆனால் அவர் போலீசுக்கு பயந்து தலைமறைவாகி விட்டார், தலைமறைவான பின்னர் அந்த பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் போலீசார் தீவிரமாக அறிவுடைநம்பியை தேடி வருகின்றனர்.
