பஞ்சமி நில மீட்புக்கு சட்டசபையில் குரல் கொடுத்த வானதி ஸ்ரீனிவாசன் !
சட்டசபையில் வானதி
By : TamilVani B
ஆதிதிராவிடர்களு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் மீட்டெடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என கோவை எம்.எல்.ஏ.பாஜக வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நடைபெற்ற தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இது குறித்து அவர் பேசியதாவது, தமிழகத்தில் ஆதிதிராவிடர்களின் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த நிலங்களை மீட்க கோரி 1991 ம் ஆண்டில் இருந்து தற்போது வரை நீதிமன்றங்கள் பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் தமிழக அரசு ஆணையம் ஒன்றை அமைத்தது ஆனால இன்று வரை அந்த அறிக்கை பொது வெளியில் வெளியிடவில்லை. அதனை தொடர்ந்து 2015 உயர் நீதி மன்றம் அமைத்த குழு அறிக்கை மற்றும் வருவாய்துறையின் மானிய புத்தகத்திலும் இது பற்றி குறிப்பிடப்படவில்லை பஞ்சமி நிலங்கள் பற்றிய எந்த அறிக்கையும் இது வரை பொது வெளியில் வெளியிடபடாதது வேதனையளிக்கிறது என தெரிவித்தார்.
பஞ்சமி நிலங்களை மீட்பதற்கு தனி சட்டம் இயற்ற வேண்டும் எனவும் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். வானதி சீனிவாசன் அவர்களின் இந்த நியாயமான கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என பல தரப்பினரிடமும் இருந்து ஆதரவு எழுந்துள்ளது.