சகோதரர் மரணம்.. நேரில் அஞ்சலி செலுத்திய டாக்டர் ராமதாஸ்.!
சகோதரர் மரணம்.. நேரில் அஞ்சலி செலுத்திய டாக்டர் ராமதாஸ்.!
By : Kathir Webdesk
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் சகோதரர் சீனுக்கவுண்டர் (எ) சீனுவாசக்கவுண்டர் இன்று பிற்பகலில் காலமானார். அவரது மறைவையொட்டி ராமதாஸ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் வசித்து வருபவர் டாக்டர் ராமதாஸ் அவருக்கு சீனுக்கவுவண்டர் (எ) சீனுவாசக்கவுண்டர் சகோதரர் உள்ளார்.
அவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இன்று பிற்பகலில் அவர் காலமாகியுள்ளார். அவரது மறைவை தொடர்ந்து ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அவரது இறுதிச்சடங்கு நாளை 3 மணியளவில் (18ம் தேதி) நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ராமதாசுக்கு பாமக நிர்வாகிகள் பலர் நேரிலும் மற்றும் தொலைபேசி வாயிலாகவும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.