ரஜினியுடன் தொழிலதிபர் நல்லி குப்புசாமி சந்திப்பு.. அரசியல் கட்சியில் இணைகிறாரா.?
ரஜினியுடன் தொழிலதிபர் நல்லி குப்புசாமி சந்திப்பு.. அரசியல் கட்சியில் இணைகிறாரா.?
By : Kathir Webdesk
சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்தை நல்லி நிறுவனர் குப்புசாமி நேரில் சந்தித்து அரசியல் கட்சி தொடங்குவதற்கு வாழ்த்து தெரிவித்ததாக தெரிகிறது.
நடிகர் ரஜினிகாந்த் வருகின்ற ஜனவரி மாதம் கட்சி தொடங்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிட்டிருந்தார்.
அவரது அறிவிப்பை தொடர்ந்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி நியமிக்கப்பட்டார். அதே போன்று கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டார். இவர்கள் இரண்டு பேரும் கட்சிக்கு வழிகாட்டுவார்கள் என்று கூறப்படுகிறது.
கட்சி தொடங்கும் பணிகளில் ரஜினி மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். தேர்தல் நெருங்க உள்ளதால் எப்படி மக்களிடத்தில் கட்சியை கொண்டு செல்ல வேண்டும் என பல பேர்களை சந்தித்து ஆலோசனை கேட்டு வருகின்றார். நேற்று ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தமிழருவி மணியன், அர்ஜுன மூர்த்தி ஆகியோருடன் ரஜினிகாந்த் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் ரஜினியை தொழிலதிபர் நல்லி குப்புசாமி சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமான சந்திப்பா? அல்லது இவரும் கட்சியில் இணைவாரா என்பன பற்றி தெரியவில்லை. விரைவில் இவரும் இணைவார் என்று ரஜினி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.