தி.மு.க அரசால் மின்சாரம் வழங்க முடியவில்லை எனில் அவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போகலாமே - சி.டி.ரவி காட்டம்
By : Thangavelu
தி.மு.க. அரசால் மின்சாரம் வழங்க முடியவில்லை எனில் அவர்கள் பதவியை உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு போகலாமே. அதற்கு பின்னர் நாங்கள் மின்சாரம் கொடுப்போம் என்று பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி அதிரடியாக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவிக்கு விமான நிலையத்தில் அக்கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தி.மு.க. ஆட்சி ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறது என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில், ஒரு வருடத்தில் தமிழகத்திற்கு அப்படி என்ன தி.மு.க. அரசு செய்தது என்று பொதுமக்களிடம் கேட்க வேண்டும்.
தி.மு.க. மக்களுக்கு அளித்த வாக்குறுதியையும், சத்தியத்தையும் நிறைவேற்றவில்லை. நிலக்கரி பற்றாக்குறைக்கு தி.மு.க.வே பொறுப்பு. அவர்கள் ஆட்சியில் உள்ளார்கள் அவர்களுக்கு எவ்வித பொறுப்பும் இல்லையா. எந்த பிரச்சினைக்கும் மத்திய அரசைதான் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்தில் ஆள்வது பிரதமர் மோடி இல்லை, முதலமைச்சர் ஸ்டாலின்தான். இந்த அரசால் மின்சாரம் கொடுக்க முடியவில்லை எனில், உடனடியாக ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டும். அதன் பின்னர் நாங்கள் மின்சாரம் அளிக்கிறோம்.
Source, Image Courtesy: One India Tamil