வன்னியர்களின் எதிர்ப்பை தொடர்ந்து ஜெய்பீம் படத்தில் காலண்டர் மாற்றம்!
நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான ‘ஜெய்பீம்’ படத்தில் வன்னியர் குறியீடான அக்னி கலசத்தை அவமதிக்கின்ற வகையில் காலண்டர் ஒன்று இடம்பெற்றது. இதற்கு பாமக தரப்பில் இருந்தும் வன்னியர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும், இயக்குனர் மோகன் மற்றும் கவுதமனன் உள்ளிட்டோரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.
By : Thangavelu
நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான 'ஜெய்பீம்' படத்தில் வன்னியர் குறியீடான அக்னி கலசத்தை அவமதிக்கின்ற வகையில் காலண்டர் ஒன்று இடம்பெற்றது. இதற்கு பாமக தரப்பில் இருந்தும் வன்னியர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும், இயக்குனர் மோகன் மற்றும் கவுதமனன் உள்ளிட்டோரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.
இதனால் பதறிப்போன தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர்கள் திடீரென்று அக்னி கலசம் இருக்கும் காலண்டரை உடனடியாக நீக்கி அதற்கு மாற்று ஒரு காலண்டர் இடம் பெற்றுள்ளது. அதுவும் கிறிஸ்தவ பெயர் உடைய நபர் வீட்டில் லட்சுமி காலண்டரை வைத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த காலண்டர் குறித்து அகில உலக ஆன்மீக இந்துமத கட்சி தலைவர் எஸ்.கே.கோபி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தற்போது வன்னியர் சமூக மக்கள் கடும் எதிர்ப்பை காட்டியதின் மூலம் ஜெய்பீம் படத்தில் அந்த காலண்டர் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் ஒரு தவறை இயக்குநர் செய்துள்ளார். குற்றவாளியாக செல்லப்படும் அந்த சப்இன்ஸ்பெக்டர் பெயர் அந்தோணிசாமி, அவர் ஒரு கிறிஸ்துவர்.. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Twiter