Kathir News
Begin typing your search above and press return to search.

1998 கோவை கலவரத்திற்கு கருணாநிதி மேல பழி போட்ட ஏத்துப்பீங்களா? - சீறும் வானதி சீனிவாசன்

'கோவை கலவரத்திற்கு அன்றைய முதல்வர் கருணாநிதி பொறுப்பை ஏற்க முடியுமா?' என எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

1998 கோவை கலவரத்திற்கு கருணாநிதி மேல பழி போட்ட ஏத்துப்பீங்களா? - சீறும் வானதி சீனிவாசன்

Mohan RajBy : Mohan Raj

  |  29 Jun 2022 10:57 AM GMT

'கோவை கலவரத்திற்கு அன்றைய முதல்வர் கருணாநிதி பொறுப்பை ஏற்க முடியுமா?' என எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.க தேசிய மகளிர் அணி பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ'வுமான வானதி சீனிவாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'குஜராத் கலவரத்தில் அப்போதைய முதல்வர் மோடிக்கு தொடர்பில்லை என சிறப்பு விசாரணைக் குழுவின் முடிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

குஜராத்தில் 2002ல் கரசேகர்கள் வந்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதில் ராம பக்தர்கள் 59 பேர் உடற்கருகி பலியாகினர் அங்கு கலவரம் மூண்டது இதில் 59 பேர் எரிக்கப்பட்டது குறித்து கவலைப்படாதவர்கள் கலவரத்துக்கு காரணம் என மாநில அரசையும் அன்றைய முதல்வர் மோடியையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தினர்.

மோடி தலைமையிலான குஜராத் அரசு மூன்று நாள் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தது அதன்பின் 20 ஆண்டுகளில் குஜராத்தில் எந்த ஒரு கலவரமும் ஏற்படவில்லை.


1998'ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகத்தின் கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு, போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரமும் யாரால் மறுக்க முடியாத கருப்பு பக்கங்களாக இருந்தது. இந்த சம்பவத்திற்கு அன்றைய முதல்வர் கருணாநிதியை யாரும் பொறுப்பேற்க சொல்லவில்லை.

ஆனால் குஜராத் கலவரத்தை முன்வைத்து மோடியை அரசியலில் இருந்து அகற்ற 2004 முதல் 2014 வரை மத்தியில் அதிகாரத்திலிருந்த காங்கிரஸ் அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டது, அத்தனை சதிகளையும் சத்தியத்தின் துணை கொண்டு வெற்றி கண்ட மோடியின் மனவலிமை பிரமிக்க வைக்கிறது. உண்மை அவர் பக்கம் இருந்ததால் அவர் இன்று நாட்டின் பிரதமராகி உலகத் தலைவராக உயர்ந்து நிற்கிறார்' என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.



Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News