Kathir News
Begin typing your search above and press return to search.

"தமிழகத்தை பாலைவனமாக்கிய கருணாநிதி" என கூறிய நல்லகண்ணு - ஸ்டாலின்  பழசை மறக்கலாமா?

"தமிழகத்தை பாலைவனமாக்கிய கருணாநிதி" என கூறிய நல்லகண்ணு - ஸ்டாலின்  பழசை மறக்கலாமா?

தமிழகத்தை பாலைவனமாக்கிய கருணாநிதி என கூறிய நல்லகண்ணு - ஸ்டாலின்  பழசை மறக்கலாமா?
X

Mohan RajBy : Mohan Raj

  |  26 Dec 2020 7:05 PM GMT

தி.மு.க'வில் ஓர் வழக்கமுண்டு தேர்தல் நேரம் வந்துவிட்டால் போதும் நண்பர், எதிரி என பார்க்க மாட்டார்கள் மாறாக அனைவரையும் தி.மு.க'வின் அபிமானிகள் மற்றும் தி.மு.க'வின் வெற்றியே அனைவரின் ஆசை என்கிற ரீதியில் மக்களை ஏமாற்றி பிரச்சாரம் செய்ய துவங்கிவிடுவர். அந்த வகையில் "தமிழகத்தை பாலைவனமாக்கிய கருணாநிதி" என தீவிர பிரச்சாரம் செய்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரை தி.மு.க'வின் அபிமானி போல் சித்தரிக்க இன்றைய தி.மு.க தலைவர் ஸ்டாலின் முயன்றுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் 96'வது பிறந்தநாளை முன்னிட்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் கூறிய வாழ்த்துரையில் "”வயதில் இளையவராக இருந்தாலும் பொதுவாழ்வில் உயர்ந்தவர் என தலைவர் கலைஞர் அவர்கள் சுட்டிக்காட்டிய அய்யா நல்லகண்ணு அவர்கள் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் வழிகாட்டியாக விளங்குபவர்” என குறிப்பிட்டுள்ளார்.

இவர் குறிப்பிடும் படி அப்படி பொதுவாழ்வில் உயர்ந்த மனிதராகிய நல்லகண்ணு அவர்கள் கடந்த 2011'ம் தேதி ஏப்ரல் மாதம் திருத்துறைப்பூண்டியில் பேசிய நல்லகண்ணு அவர்கள் கருணாநிதி பற்றி கூறியதாவது, "கடந்த இரண்டாண்டு காலமாக தமிழகம் தலைக்குனிந்து நிற்க வேண்டிய அளவுக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி செயல்பட்டுள்ளார். தாழ்ந்த தமிழகமே என, 1946ல் பேசிய கருணாநிதி, அண்ணாதுரை ஆகியோர் கூறினர். ஆனால், 2011ல் தரம் தாழ்ந்த தமிழகமாக லஞ்சத்தில் ஊறித்திளைக்கின்ற, சட்டம் ஒழுங்கு அழிந்து கொண்டிருக்கின்ற பாலைவனமாக தமிழகத்தை கருணாநிதி ஆக்கிவிட்டார்" என தி.மு.க'வின் ஆட்சியையும், கருணாநிதியின் ஆட்சி இயலாமையையும் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே நல்லகண்ணு அவர்கள் கூறினார்கள்.

ஆனால் இன்றோ தி.மு.க அவையெல்லாம் ஏதும் நடக்காது என்பது போல தேர்தலுக்காக பாசாங்கு செய்கிறது. பொதுவாழ்வில் உயர்ந்த மனிதர் என தி.மு.க கூறும் ஒருவரே கருணாநிதி தமிழகத்தை பாலைவனமாக்கிவிட்டார் என கூறியிருப்பது கடந்த கால தி.மு.க'வின் ஆட்சியின் அவல நிலையை காட்டியுள்ளது.

தி.மு.க வேண்டுமானால் பதவி வெறியில் பழசை மறக்கலாம், ஆனால் மக்கள் மறப்பார்களா என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News