துண்டு சீட்டு இல்லாமல் மோதி பார்க்கலாமா.. ஸ்டாலினுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி.!
துண்டு சீட்டு இல்லாமல் மோதி பார்க்கலாமா.. ஸ்டாலினுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி.!
By : Kathir Webdesk
துண்டு சீட்டு இல்லாமல் கருத்து மோதலில் நேருக்கு நேர் மோதி பார்ப்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: வேளாண் பணி சிறந்து விளங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. திமுக- நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்தால் எந்த பலனும் இல்லை. பூத கண்ணாடியை வைத்து பார்த்தாலும் ஆட்சியில் குறை கண்டுபிடிக்க முடியாது.
முதலமைச்சர் பதவிக்கு ஸ்டாலின் வெறியுடன் செயல்படுகிறார். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயல்கிறார். அடிப்படை வசதிகளை நிறைவேற்றியது அதிமுக அரசு. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கூடிய கட்சி அ.தி.மு.க ஒருதாய் வயிற்றில் பிறந்த அண்ணணுக்கே துரோகம் இழைக்கும் ஸ்டாலின், மக்களை எவ்வாறு பாதுகாப்பார்? துண்டு சீட்டு இன்றி கருத்து மோதலில் நேருக்கு நேர் மோதி பார்ப்போம் என்றார்.
தற்போது முதலமைச்சர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.