Kathir News
Begin typing your search above and press return to search.

'நாளைக்கு 10 சீட்டு கூட வாங்க முடியாது' - கடுப்பில் பி.டி.ஆர் அடித்த எச்சரிக்கை மணியின் பின்னணி என்ன?

'பதவி வரும் போகும் பி.டி.ஆர்.மகன் என்பதே எனக்கு அடையாளம்' என பழனிவேல் தியாகராஜன் கூறியது தி.மு.க'விற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளைக்கு 10 சீட்டு கூட வாங்க முடியாது - கடுப்பில் பி.டி.ஆர் அடித்த எச்சரிக்கை மணியின் பின்னணி என்ன?

Mohan RajBy : Mohan Raj

  |  2 Jan 2023 7:32 AM GMT

'பதவி வரும் போகும் பி.டி.ஆர்.மகன் என்பதே எனக்கு அடையாளம்' என பழனிவேல் தியாகராஜன் கூறியது தி.மு.க'விற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க'வின் அமைச்சரவையின் நிதி அமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாகராஜன் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் அவ்வப்பொழுது அதிரடியாக ஏதாவது கருத்துக்கள் கூறி தானும் சர்ச்சையில் சிக்கி கட்சியையும்சர்ச்சையில் சிக்க வைத்து விடுவார்.

தற்போது தி.மு.க'வில் உதயநிதி ஆதரவாளர்கள், உதயநிதியை ஏற்க தயங்குபவர்கள் என இரண்டு அணி உருவாகியுள்ளது. உதயநிதியை சின்னவர் என்றும், உதயநிதிதான் இளைய தலைவர் என்றும் உதயநிதிக்கு சால்வை போட்டு எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் வயதுகூட பார்க்காமல் உதயநிதியை முன் நிறுத்தி தி.மு.க'வில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ஒரு தரப்பினர் வேலை செய்து வருகின்றனர்.

மற்றொரு தரப்பினரோ 'எங்களுக்கு சுயமரியாதை இருக்கு, இதுக்கா நாங்க கட்சிக்கு தலைமுறை தலைமுறையா வேலை பார்க்கிறோம், உதயநிதி தான் தி.மு.கவா இது மக்களிடையே தி.மு.க'விற்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தும் கட்சியில் வந்து முழுதாக மூன்று ஆண்டுகள் கூட முடியவில்லை அதற்குள் உதயநிதிக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம்? காலம் காலமாக தி.மு.க'விற்கு உழைத்த நாங்கள் என்ன மடையர்களா? நாங்கள் எதுக்கு வயதில் குறைந்த உதயநிதிக்கு சலாம் போட வேண்டும் என ஒரு தரப்பினரும் மானமுடன் உள்ளனர்.

ஆக இன்றைய தி.மு.க உதயநிதி ஆதரவாளர்கள் மற்றும் உதயநிதி எதிர்ப்பாளர்கள் என இரு தரப்பாக பிரிந்துள்ளது. இந்த நிலையில் உதயநிதி எதிர்ப்பாளர்கள் தரப்பில் முக்கியமான ஆளாக கருதப்படுபவர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன் இவர் உதயநிதியை எதிர்ப்பதாக வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் ஆதரிப்பதாக எப்பொழுதுமே காட்டிக்கொண்டதே கிடையாது. உதயநிதிக்கு வாழ்த்து சொல்வதை கூட தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் போடாமல் தனது அலுவலக ட்விட்டர் கணக்கில் போட்டு அதனை பெரிய விஷயமாக கருதாமல் இருப்பதாக காட்டிக் கொண்டார்.

மேலும் தி.மு.க'வின் மூத்த தலைவர்களான கே.என்.நேரு, பொன்முடி, துரைமுருகன் போன்றோர் உதயநிதியை வானுயர புகழும் நேரத்தில் அது போன்ற எந்த ஒரு வார்த்தைகளையும் உதிர்க்காமல் நான் இப்படித்தான் உதயநிதியை புகழ வேண்டும் என்று அவசியம் இல்லை என்ற தோணியிலேயே பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வலம் வருகிறார்.

இந்த நிலையில் மதுரை 14-வது வட்ட தி.மு.க சார்பாக புதூர் பேருந்து நிலையம் அருகே நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசிய பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், 'நான் பல வங்கிகளில் பணியாற்றி பொருளாதார முன்னேற்றம் அடைந்த பிறகு தான் அரசியலுக்கு வந்தேன். பதவி, பொறுப்பு வரும், போகும், நாளை 10 சீட்டுகள் கூட கிடைக்காத கட்சியாக மாறலாம்.

ஆனால் மனிதனின் அன்பு, பாசத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும் உலகில் எனக்கு எத்தனை பெரிய பதவி வந்தாலும் நான் பி.டி.ஆரின் மகன் என்பதை பெருமை, என் அடையாளம் அதற்கு மேல் யாராலும் எனக்கு எந்த பதவியையும் கொடுக்கவும் முடியாது எடுக்கவும் முடியாது' என பேசி உள்ளார்.

வெளியில் ஒப்புக்கு உதயநிதியை புகழ்வது போல் நடித்துவிட்டு, குதர்க்கமாக பதவி வரும் போகும் நாளை 10 சீட்டுகள் கூட கிடைக்காத கட்சியாக மாறலாம் என தி.மு.க'வை கூறி இருப்பது இதே நிலைமை நீடித்தால் மக்கள் உங்களை தூக்கி எறியவும் தயங்க மாட்டார்கள் உடன்பிறப்புகளே என பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தி.மு.க'வினருக்கு சொல்லாமல் சொல்வது போன்று பேசியது தி.மு.க உட்கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News