Kathir News
Begin typing your search above and press return to search.

சிறையில் சூரிய வெளிச்சம் கூட பார்க்க முடியவில்லை - பண மோசடி வழக்கில் சிறை சென்ற சஞ்சய் ராவத் வேதனை

'சிறையில் 10 கிலோ எடை குறைந்துவிட்டது' என சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

சிறையில் சூரிய வெளிச்சம் கூட பார்க்க முடியவில்லை - பண மோசடி வழக்கில் சிறை சென்ற சஞ்சய் ராவத் வேதனை
X

Mohan RajBy : Mohan Raj

  |  19 Nov 2022 10:55 AM IST

'சிறையில் 10 கிலோ எடை குறைந்துவிட்டது' என சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார், சமீபத்தில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தன்னுடைய சிறை அனுபவம் குறித்து அவர் கூறியதாவது, 'என்னை கைது செய்து 15 நாட்கள் தனிமை சிறையில் அடைத்தனர். 15 நாட்களாக சூரிய வெளிச்சத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை. சிறைக்குள் இருந்த விளக்குகளால் என் கண் பார்வை பாதிக்கப்பட்டது.

இப்போது கூட என்னால் சரியாக படிக்க கூட முடியவில்லை, சரியாக காது கூட கேட்பதில்லை. ஞாபக சக்தியும் குறைந்து வருகிறது' என்றார். சிவசேனா கட்சியை விட்டு செல்ல விரும்புபவர்கள் செல்லலாம் மகாராஷ்டிரா மக்கள் உத்தவ் தாக்கரே சிவசேனாவுடன் இருக்கின்றர் என அவர் தெரிவித்தார்.

Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News