Kathir News
Begin typing your search above and press return to search.

ஆம்புலன்சுக்கு வழி விடமுடியாது.. வேறு வழியில் போக சொல்லுங்க.. கனிமொழியின் திமீர் பேச்சு.!

ஆம்புலன்சுக்கு வழி விடமுடியாது.. வேறு வழியில் போக சொல்லுங்க.. கனிமொழியின் திமீர் பேச்சு.!

ஆம்புலன்சுக்கு வழி விடமுடியாது.. வேறு வழியில் போக சொல்லுங்க.. கனிமொழியின் திமீர் பேச்சு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Dec 2020 12:17 PM GMT

தமிழகம் முழுவதும் திமுகவினர் செய்யும் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், அடுத்தது எங்கள் ஆட்சிதான் வரப்போகிறது. எனவே எந்த வழக்கு இருந்தாலும் அதிலிருந்து விடுபட்டுக்கொள்வோம் என்பதுதான் அவர்களின் ஒரே நோக்கமாகும். எனவேதான் இது போன்ற அராஜகங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தலைவர் முதல் தொண்டன் வரை ஒரே மாதிரியான குறிக்கோள்களை கொண்ட கட்சிதான் திமுக.

தற்போது மீண்டும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு செயல் அரங்கேறியுள்ளது. கோவையில் திமுக எம்.பி., கனிமொழி சாலையில் நடுவே வாகனத்தில் பேசியுள்ளார். அப்போது அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. அதில் நோயாளி ஒருவர் உயிருக்காக போராடியுள்ளார். ஆனால் தி.மு.க.வினர் வழிவிட மறுத்துவிட்டனர். அப்போது அங்கு பேசிக்கொண்டிருந்த கனிமொழியும் வழி விட சொல்லவில்லை. அதற்கு பதிலாக ஆம்புலன்சை மாற்று பாதையில் செல்ல சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். இது அங்கிருந்து பொதுமக்கள் மட்டுமின்றி மாற்று கட்சியினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

திமுக சார்பில் கனிமொழி எம்.பி., விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக நேற்று மாலை கோவை -மருதமலை சாலையில், பாப்பநாயக்கன் புதூர் என்ற பகுதியில் திமுக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அங்கிருந்த கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து விட்டு வேனில் ஏறி பேச ஆரம்பித்தார்.

மருதமலையிலிருந்து கோவை செல்லும் சாலையின் நடுவே அவரது வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வாகனத்தைச் சுற்றிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் நின்றனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. அப்போது வடவள்ளி பகுதியிலிருந்து கோவையை நோக்கி 108 ஆம்புலன்ஸ் வாகனம் நோயாளியுடன் வந்தது. ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேட்டும் திமுக தொண்டர்கள் யாரும் வழிவிடவில்லை.

வேறு வழியின்றி ஆம்புலன்சைத் திருப்பி எதிர் திசையில் அதாவது ஒரு வழிப்பாதையில் அனுப்பி வைத்தனர். கனிமொழி நினைத்திருந்தால் மைக் மூலமாக பேசி அந்த ஆம்புலன்ஸ்க்கு தொண்டர்கள் வழிவிட செய்திருக்கலாம். ஆனால் அதைச் செய்யாத அவர் அதற்கு மாறாக ‘இந்த ஆம்புலன்சும் நாங்கள் விட்டதுதான்’ என்று அரசியல் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஒரு வழிப்பாதையில் ஆம்புலன்சை செல்லவும் கூறினார். இவரது பேச்சு, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பொதுமக்கள், வணிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரலை ஒலிக்க வந்த கனிமொழி உயிருக்காகப் போராடிக் கொண்டு மருத்துவமனையை நோக்கிச் செல்லும் வாகனத்துக்கு ஏன் வழிவிடவில்லை என்று மக்கள் ஆதங்கத்துடன் பேசிக் கொண்டனர். மேலும், இவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டால் தமிழகமே இது போன்ற நிலையை சந்திக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இதனை அனைத்தும் மக்கள் கவனித்து வருகின்றனர். விரைவில் திமுக கும்பலை மக்கள் விரட்டி விரட்டி வீட்டுக்கு அனுப்புவார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News