காங்கிரசுக்கு டாட்டா.! அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்கினார்!
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் சோனியாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், தனது புதிய கட்சிக்கு ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்று பெயரிட்டுள்ளார்.
By : Thangavelu
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் சோனியாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், தனது புதிய கட்சிக்கு 'பஞ்சாப் லோக் காங்கிரஸ்' என்று பெயரிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ் ஜோத் சித்துவுடன் கடந்த சில மாதங்களாக மோதல் ஏற்பட்டது. இதனால் அவர் தனது முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய அமரீந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சி ஒன்றையும் துவக்குவதாக தகவல்கள் வெளியாகியது. இதனால் காங்கிரசுடன் சமரச பேச்சு நடத்துவதாக தகவல் வெளியாகியது. இதனை அவர் மறுத்தார். சமாதானத்திற்கான காலங்கள் கடந்து விட்டதாகவும், எனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி தனது மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அனுப்பினார். மேலும், தான் துவங்க உள்ள கட்சிக்கு ‛பஞ்சாப் லோக் காங்கிரஸ்' என்ற பெயரையும் வைத்துள்ளார். இதனால் அம்மாநில அரசியலில் மீண்டும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Source, Image Courtesy: Dinamalar