வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றது செல்லும்: வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!
கோவை தெற்கு தொகுதியில் எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
By : Thangavelu
கோவை தெற்கு தொகுதியில் எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனை விட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 1,600 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். அருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனால் பலர் வானதி சீனிவாசன் எப்படி வெற்றி பெற்றார் என்ற கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக சொல்லி கோவை தெற்கு தொகுதியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளரான ஹிந்துஸ்தான் ஜனதா கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் வழக்கில் எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் மற்றும் பாஜக சார்பில் வானதி சீனிவாசன், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: ZeeNews
Image Courtesy: Ndtv