மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த கடைசி அறிவிப்புக்கு மத்திய அரசு விருது.!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த கடைசி அறிவிப்புக்கு மத்திய அரசு விருது.!
By : Kathir Webdesk
அறநிலையத்துறை கணினிமயமாக்கப்படும் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2016ம் ஆண்டு செப்டம்பரில் அறிவித்தது தான் அவருடைய கடைசி அறிவிப்பு. இந்த அறிவிப்பு தற்போது மத்திய அரசு விருது அறிவித்துள்ளது.
சட்டசபையில் அறநிலையத்துறை தொடர்பாக பேசிய ஜெயலலிதா, 1 கோடியில் இந்தத்துறை கணினிமயமாக மாற்றப்படும் என்றார். பின்னர் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சில மாதங்கள் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், அவர் அறிவித்த அறநிலையத்துறை கணினிமயமாக்கப்படும் என கூறியிருந்தார். ஆனால் இத்துறை இன்னும் முழுமையாக கணினிமயமாக்கப்படவில்லை. இச்சூழலில் மத்திய அரசு விருதுக்கு இந்தத்துறை தேர்வாகியுள்ளது.
தமிழகத்தில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. கோயில் தொடர்பான வரலாறு, சிறப்புகள், வருமானம், புகார்கள், அதுª தாடர்பான நடவடிக்கைகள், வருமானம், சொத்து, வழக்கு விபரங்கள் என அனைத்து வித தகவல்களையும் கொண்ட சாப்ட்வேரில் சேகரித்து வைக்கப்படும் என கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.