தேர்தல் தோல்விக்கு தயாராகுங்கள். எதிர்க்கட்சிகளை மிரள வைக்கும் அமித்ஷா !
கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது பாஜக தலைமையிலான கூட்டணி 325 இடங்களை கைப்பற்றியது. பாஜக மட்டும் தனியாக 312 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
By : Thangavelu
அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றிப் பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை அளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தற்போது இருந்தே அரசியல் கட்சிகள் தங்களது பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. இந்த தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுவதால் அம்மாநில பொதுத்தேர்தல் அனைவரின் பார்வையும் பெறும்.
கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது பாஜக தலைமையிலான கூட்டணி 325 இடங்களை கைப்பற்றியது. பாஜக மட்டும் தனியாக 312 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், லக்னோவில் அமைக்கப்படவுள்ள மாநில தடயவியல் நிறுவனத்தின் பூமி பூஜை விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது: யோகி ஆதித்யநாத் தலைமையில் உபி மாநிலம் வளர்ச்சிப்பாதையில் பயணம் செய்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக யோகி அரசு சிறப்பாக செயல்பட்டு மக்களின் உயிர்களை காப்பாற்றியது.
அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரும். இருக்கின்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் தோல்வியை சந்திக்க தயாராகுங்கள்.
முதல்வர் யோகி அடியநாத் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தியுள்ளார். முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்தது மட்டுமின்றி ஊழலை ஒழித்துள்ளார். கொரோனா சமயத்தில் யோகியும் அவரது அமைச்சர்களும் சிறப்பான சேவைகளை செய்துள்ளனர்.
மேலும், தேர்தல் நெருங்கி வருவதால் தற்போது எதிர்க்கட்சி தலைவர்கள் வெளியே வருகின்றனர். அவர்களின் தவறான வழிநடத்துவதை மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது. கடந்த கால ஆட்சியில் நில மாப்பியாக்கள் இருந்தனர். வன்முறை நிகழ்ந்தது. பாஜக மட்டுமே ஏழைகளுக்காக உழைத்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
Source: Dinamalar
Image Courtesy: Bjp ட்விட்டர்
https://www.dinamalar.com/news_detail.asp?id=2814362