Kathir News
Begin typing your search above and press return to search.

தேர்தல் வெற்றி ! மாவட்ட தலைவர்களுக்கு இனோவா கார் வழங்கும் மத்திய அமைச்சர் எல்.முருகன் !

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் மாவட்டத் தலைவர்களுக்கு இனோவா கார் பரிசாக வழங்கப்படும் என்று அப்போதைய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியிருந்தார்.

தேர்தல் வெற்றி ! மாவட்ட தலைவர்களுக்கு இனோவா கார் வழங்கும் மத்திய அமைச்சர் எல்.முருகன் !

ThangaveluBy : Thangavelu

  |  21 Aug 2021 9:00 AM GMT

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் மாவட்டத் தலைவர்களுக்கு இனோவா கார் பரிசாக வழங்கப்படும் என்று அப்போதைய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியிருந்தார்.

அதன்படி பாஜக வேட்பாளர்கள் எம்.ஆர்.காந்தி நாகர்கோயில் தொகுதியிலும், வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியிலும், நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியிலும், சரஸ்வதி மொடக்குறிச்சி தொகுதியிலும் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு நுழைந்தனர்.

இதனால் இவர்கள் வெற்றி பெற வைத்த மாவட்டங்களான ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோயில், கோவை ஆகிய மாவட்ட தலைவர்களுக்கு நாளை, சென்னை, தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் புதிய காரை பரிசாக வழங்குகிறார்.

இவர் கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றுகிறார். சமூக வலைதளங்களில் இவர் பேசிய வீடியோக்கள் தற்போது அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Bjp

https://tamil.news18.com/news/tamil-nadu/union-minister-l-murugan-will-give-innova-car-to-bjp-districts-chief-skd-vel-539633.html

Next Story
கதிர் தொகுப்பு
Trending News