Kathir News
Begin typing your search above and press return to search.

பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு முதல் மத்திய அமைச்சர் வரை.. பா.ஜ.க. தலைவர் எல்.முருகனின் வாழ்க்கை வரலாறு.!

எல்.முருகனின் தீவிர முயற்சியால் தமிழகத்தில் 4 பாஜக எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தனர். இவர் இதற்கென்று தீவிரமாக தேர்தல் பிரச்சராம் மேற்கொண்டார். தமிழக சட்டமன்றத்திற்குள் தாமரை மலரும் என்று சபதம் போட்டிருந்தார். அதே போன்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் நுழைந்து சாதனை படைத்தனர்.

பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு முதல் மத்திய அமைச்சர் வரை.. பா.ஜ.க. தலைவர் எல்.முருகனின் வாழ்க்கை வரலாறு.!

ThangaveluBy : Thangavelu

  |  8 July 2021 1:54 AM GMT

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறையும் அவருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

இவரது வாழ்க்கை வரலாற்றை பார்ப்போம். எல்.முருகன் கடந்த 1977ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி நாமக்கல் மாவட்டம், கோனூர் என்ற கிராமத்தில் பிறந்தார். அவருக்கு வயது 44 ஆகிறது. இவர் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார். சென்¬னில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பையும், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டப்படிப்பபையும் படித்துள்ளார்.


மேலும், மனித உரிமை சட்டம் என்ற தலைப்பில் பி.எச்.டி. சென்னை பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞராகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.

முன்னணி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு சட்ட ஆலோசகராகவும் இருந்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளை கற்று மிகவும் புலமை வாய்ந்தவராகவும் உள்ளார். மத்திய அமைச்சர் எல்.முருகன் இளைஞர் பருவத்தில் அகில பார்திய வித்யார்த்தி பரிஷத் என்ற மாணவர் அமைப்பில் சேர்ந்துள்ளார். இந்த அமைப்பில் 1997 முதல் 2001ம் ஆண்டு வரை அங்கம் வகித்துள்ளார்.

இதன் பின்னர் பாஜகவில் உறுப்பினராக சேர்ந்து, கட்சியில் மிகவும் கடினமாக உழைத்தால் அவருக்கு குறுகிய காலக்கட்டத்தில் மாநில அந்தஸ்து பதவி கிடைத்தது. அதன்படி தமிழக பாஜக எஸ்.சி., பிரிவின் மாநில துணைத் தலைவராக 2006 முதல் 2009 வரை பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் 2009 முதல் 2014ம் ஆண்டு வரையில் அந்த பிரிவுக்கு மாநில தலைவராகவும் இருந்துள்ளார்.


இதனை தொடர்ந்து பாஜக எஸ்.சி., பிரிவின் தேசிய செயலாளராக கடந்த 2014 முதல் 2017ம் ஆண்டு வரை பணியாற்றினார். அதனை தொடர்ந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக கடந்த 2017- முதல் 2020-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். இந்தப்பதவி மாநில அமைச்சருக்கு ஈடானது.

இந்த பதவி முடிவுற்ற பின்னர் தமிழக பாஜக மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இவர் மாநில தலைவரான பின்னர் பல்வேறு பிரமுகர்கள் நடிகர்கள் என கட்சியில் சேர்ந்தனர். சமீபத்தில் நடத்திய வேல் யாத்திரை அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் ஈர்த்தது. இவர் நடத்திய வேல் யாத்திரையை பார்த்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினும் கையில் வேல் ஏந்தி நின்றார். அவரது கட்சியை சேர்ந்தவர்களும் வேல் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்.முருகனின் தீவிர முயற்சியால் தமிழகத்தில் 4 பாஜக எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தனர். இவர் இதற்கென்று தீவிரமாக தேர்தல் பிரச்சராம் மேற்கொண்டார். தமிழக சட்டமன்றத்திற்குள் தாமரை மலரும் என்று சபதம் போட்டிருந்தார். அதே போன்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் நுழைந்து சாதனை படைத்தனர்.


மேலும், அவர் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இருந்தாலும் மற்ற பாஜக எம்.எல்.ஏக்களை வெற்றி பெற செய்துள்ளார. கிட்டத்தட்ட தமிழக சட்டமன்றத்திற்குள் 20 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக எம்.எல்.ஏ.க்கள் நுழைவதற்கு எல்.முருகன் ஒரு காரணம் என்றும் பேசப்படுகிறது. இதற்குகூட மத்திய அமைச்சர் பதவி அவருக்கு கிடைத்திருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இவர் சென்னை கோயம்பேடு அன்னை சத்தியாநகரில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மனைவி கலையரசி, சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் மயக்கவியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு தர்னேஷ் மற்றும் இந்திரஜித் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்திருப்பது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News