மத்திய பிரதேசத்தில் இருந்து எல்.முருகன் பா.ஜ.க. எம்.பி.யாக தேர்வாகிறார் !
நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்படாத நிலையில், மேலவை உறுப்பினர் தேர்தலில் தற்போது எல்.முருகன் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
By : Thangavelu
நாடாளுமன்ற மேலவை தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. அதன்படி மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அசாமில் இருந்து வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலத்தில் இருநுது பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவராக எல்.முருகன் பணியாற்றிய காலத்தில் சிறப்புடன் செயல்பட்டு சட்டமன்றத்திற்கு 4 பாஜக எம்.எல்.ஏ.க்களை அனுப்பி வைத்துள்ளார். இதற்கு ஈடாக பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.
எனினும், நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்படாத நிலையில், மேலவை உறுப்பினர் தேர்தலில் தற்போது எல்.முருகன் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Daily Thanthi