கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம்.. 7ம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர்.!
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

By : Thangavelu

அதன்படி மத்திய உள்துறை அமைச்சர் கடந்த 28ம் தேதி காரைக்கால், புதுவை, விழுப்புரத்தில் பிரசாரம் செய்தார். இதன் பின்னர் அன்றைய இரவு சென்னை சென்று தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் வருகின்ற 7ம் தேதி தமிழகம் வருகிறார். கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி வருகை தருகிறார். அப்போது மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்த துண்டறிக்கைகளை வீடு தோறும் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே போன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் தமிழகம் வருகிறார். அவர் வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளார்.