தலைவரே!நீங்கள் சொன்ன 6100 கோடி முதலீடு என்ன ஆனது? அண்ணாமலை பளீர் கேள்வி
துபாய் சென்று வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. நீங்கள் முதலீடு செய்வதாக சொன்ன 1600 கோடி முதலீடு என்ன ஆனது? என்று அண்ணாமலை மு.க ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
By : Karthiga
ஆண்டுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு தற்போது வரை அதற்கான எந்த முயற்சிகளும் எடுக்காமல் செயலற்று போயிருக்கிறது. துபாய் சுற்றுலா சென்று வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது . அவர் சொன்னபடி ரூபாய் 6100 கோடி முதலீடு என்ன ஆனது என்று தெரியவில்லை. கடந்த நிதி ஆண்டை விட 2022-23 தமிழகத்தில் நேரடி அந்நிய முதலீடு 27.7 சதவீதம் குறைந்திருக்கிறது. புதிதாக தொழில் தொடங்க வருவோரிடம் 30 சதவீத கமிஷன் வசூலிக்க முயற்சிப்பதால் தமிழகத்தில் புதிய நிறுவனங்கள் முதலீடு செய்வதை தவிர்க்கின்றன.
சமீபத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் ரூபாய் 1600 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் 6 ஆயிரம் பேர் வேலை வாய்ப்புகள் பெறுவார்கள் என்றும் அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பை அவர் உடனடியாக திரும்பப் பெற்றார். தற்போது கர்நாடக மாநில அரசுடன் பாக்ஸ்கான் நிறுவனம் ரூபாய் 4963 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருப்பதாக அம் மாநில மந்திரி பிரியங்கா கார்கே அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்த அந்த முதலீடு தான் கர்நாடக மாநிலத்திற்கு கைமாறி இருக்கிறதா?
தமிழகத்தில் ரூபாய் 1600 கோடி என்று அறிவித்துவிட்டு தற்போது கர்நாடகாவில் அதைவிட மூன்று மடங்கு அதிகமாக முதலீடு செய்ய காரணம் என்ன? இதை தெளிவுபடுத்த வேண்டும். எத்தனை நாட்களுக்கு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியும். விரைவில் இளைஞர்கள் தமிழக அரசை கேள்வி கேட்க தொடங்குவார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
SOURCE :DAILY THANTHI