10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் நிலையை மாற்றிக்கொள்ளுங்கள் இல்லையேல் தேர்தல் நேரத்தில் கடும் விளைவுகளை சந்திப்பீர்கள் - முதல்வர் ஸ்டாலினை எச்சரித்த அனைத்து சமுதாய தலைவர்கள்
10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தன் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் தேர்தல் நேரத்தில் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

By : Mohan Raj
10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தன் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் தேர்தல் நேரத்தில் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்ற உறுதி செய்தது இதனை தமிழக அரசு நடைமுறைப்படுத்த கோரி பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் தலைமையில் கலந்து கொண்ட அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.
அந்த கூட்டத்தில் தேவநாதன் பேசியதாவது, 'பொருளாதாரத்தில் நலிவடைத்தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம், பொதுப்பட்டியல் என குறிப்பிடாமல் உயர்ஜாதி என்றும் உயர் வகுப்பினர் என்றும் குறிப்பிட்ட தலைமைச் செயலாளரை கண்டிக்கிறோம். தி.மு.க'வின் கொள்கையை அரசு வழியாக திணிக்க பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
அவரது தந்தை கருணாநிதி 2006-08 ஆண்டுகளில் விடுபட்ட ஜாதியினரை பொதுப்பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதனை மறந்து முதல்வர் பேசுவது தரவு தவறு பிராமணர்களுக்கு 10% இட ஒதுக்கீடு என கூறுகின்றனர் இந்த பட்டியலில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என 79% பிரிவினர்கள் இடம் பெறுகின்றனர். முதல்வர் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் தேர்தல் நேரத்தில் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என எச்சரித்தார்.
