'பாடப்புத்தகங்களில் ஒன்றிய அரசு, செம்மொழி பாடல், ஆளுநர் அதிகாரம் குறித்த மாற்றங்கள்' - லியோனி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
மத்திய அரசுக்கு பதிலாக ஒன்றிய அரசு என பள்ளி பாடப்புத்தகங்களில் திருத்தம் செய்யப்படுகிறது குறித்து லியோனி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

By : Mohan Raj
மத்திய அரசுக்கு பதிலாக ஒன்றிய அரசு என பள்ளி பாடப்புத்தகங்களில் திருத்தம் செய்யப்படுகிறது குறித்து லியோனி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் பாடப்புத்தகத்தில் மத்திய அரசு மற்றும் ஆளுநர் அதிகாரம் உள்ளிட்ட அம்சங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் லியோனி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து லியோனி வெளியிட்டுள்ள தகவலில் பள்ளி பாடப்புத்தகங்களில் மத்திய அரசு என்ற வார்த்தைக்கு ஒன்றிய அரசு என மாற்றுதல், கருணாநிதி செம்மொழி பாடல், ஆளுநரின் அதிகாரங்கள் பற்றிய குறிப்பில் திறத்தல் செய்தல் போன்ற மாற்றங்கள் எதுவும் வரும் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்களில் கிடையாது வரும் 2022-23'ம் கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன
மேலும் 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான புத்தகங்களில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களில் திருத்தம் இருப்பின் அது 2023-24'ம் கல்வி ஆண்டுக்கான பாடநூல்களில் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
