Kathir News
Begin typing your search above and press return to search.

செங்கல்பட்டில் கருப்பு பூஞ்சை நோய்க்கு அ.தி.மு.க. பெண் பிரமுகர் உயிரிழப்பு.!

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட கண்ணகபட்டு பகுதியை சேர்ந்தவர் பாரதி 53, இவர் அதிமுக திருப்போரூர் வடக்கு ஒன்றிய மகளிரணி தலைவராக உள்ளார். இவருக்கு கடந்த மாதம் 23ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, திருப்போரூர் அருகே உள்ள அம்மாபேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செங்கல்பட்டில் கருப்பு பூஞ்சை நோய்க்கு அ.தி.மு.க. பெண் பிரமுகர் உயிரிழப்பு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  4 Jun 2021 4:41 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட கண்ணகபட்டு பகுதியை சேர்ந்தவர் பாரதி 53, இவர் அதிமுக திருப்போரூர் வடக்கு ஒன்றிய மகளிரணி தலைவராக உள்ளார். இவருக்கு கடந்த மாதம் 23ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, திருப்போரூர் அருகே உள்ள அம்மாபேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது கடந்த வாரம் அவருக்கும் முகம், கண்ணீல் வீக்கம் ஏற்பட்டுள்ளது. பரிசோதனையில் கருப்பு பூஞ்சை நோய் இருப்பது தெரியவந்தது.


இதனை தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பாரதியின் உடலை சென்னை மாநகராட்சி ஊழியர்கள், பெருங்குடியில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் உயிரிழந்த சம்பவம் அக்கட்சி நிர்வாகிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News