Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரை.!

அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன், வருகின்ற 2023ம் ஆண்டுக்குள் வீடு இல்லாத ஏழைகளுக்கு கான்கரீட் வீடுகள் கட்டி தரப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.

சென்னையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரை.!
X

ThangaveluBy : Thangavelu

  |  19 March 2021 6:06 PM IST

அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன், வருகின்ற 2023ம் ஆண்டுக்குள் வீடு இல்லாத ஏழைகளுக்கு கான்கரீட் வீடுகள் கட்டி தரப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.

சென்னையில் துணை முதலமைச்சர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மூர்த்தி, திருவொற்றியூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குப்பன் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரம் துவங்குவதற்கு முன்னர் திருவொற்றியூர் பிரசத்தி பெற்ற வடிவடையம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னரே பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது பேசி துணை முதலமைச்சர்; தமிழகத்தில் வீடு இல்லாத ஏழைகளுக்கு இதுவரை 6.5 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது என பேசினார்.

இதனைத்தொடர்ந்து பொன்னேரி தொகுதி அதிமுக வேட்பாளர் சிறுணியம் பலராமன், கும்மிடிப்பூண்டி பாமக வேட்பாளர் பிரகாஷ் ஆகியோர்களுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News