உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வெற்றி ! சென்னை உயர்நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு !
தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது அவர் தனது மனுவில் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
By : Thangavelu

மேலும், உதயநிதி ஸ்டாலின் தனது வேட்பு மனுவில் குற்ற வழக்கு விவரங்களை குறிப்பிடாமல் தவறான தகவலை தெரிவித்துள்ளார். எனவே அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டிந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், 2 வாரங்களில் தேர்தல் ஆணையம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். மேலும் வழக்கை அடுத்த மாதம் அக்டோபர் 1ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
தற்போது திமுக எம்.எல்.ஏ., உதயநிதி வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று அக்கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் குழு ஆராய்ந்து வருகிறது. இந்த வழக்கு தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source: Maalaimalar
Image Courtesy: