டெல்லிக்கு பயணம் செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.. ஏன் தெரியுமா.?
டெல்லிக்கு பயணம் செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.. ஏன் தெரியுமா.?
By : Kathir Webdesk
நாளை மறுதினம் (19ம் தேதி) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற 19ம் தேதி செவ்வாய் அன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அந்த சந்திப்பின்போது தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அப்போது கோரிக்கை வைப்பார் என கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைக்கும்படியும் அழைப்பு விடுக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் முடிவுறும் தருவாயில் உள்ளது. அதனை திறந்து வைக்கவும் அவர் அழைப்பு விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், முதலமைச்சர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.