தி.மு.க., தொண்டனையும் மகிழ்வித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!
தி.மு.க., தொண்டனையும் மகிழ்வித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!

தமிழகம் முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் அரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
அவரது உத்தரவிபடி இன்று முதல் தமிழகம் முழுவதும் பொங்கல் தொகுப்புடன் ரூ.2,500 வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம் தோறும் அமைச்சர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை தலைவர்கள் இந்த பரிசுத்தொகுப்பினை துவக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு ரேசன் கடையில் திமுக தொண்டர் ஒருவர் குதூகலத்துடன் ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெற்றுக்கொண்டார். அவர் பணத்தை பெற்றுக்கொண்டு உற்சாகமுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இவரது படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டத்தை கொண்டு சேர்ப்பதில் அதிமுக அரசு உறுதியுடன் உள்ளதை இந்த படம் உணர்த்துகிறது.