எதையும் சந்திக்கின்ற தைரியம் முதலமைச்சரிடம் உள்ளது: டிடிவி தினகரனுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்.!
எதையும் சந்திக்கின்ற தைரியம் முதலமைச்சரிடம் உள்ளது: டிடிவி தினகரனுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்.!
By : Kathir Webdesk
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையான சசிகலா நேற்று தமிழகம் திரும்பியுள்ளார். அவருக்கு அமமுக கட்சியினர் வரவேற்பு அளித்தனர். இதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். இதன் பின்னர் சசிகலா சென்னை வந்தவுடன், டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார், அப்போது அவர் அதிமுக கட்சிக்கு சசிகலாதான் பொதுச்செயலாளர் என கூறினார்.
ஆனால் இதனை அதிமுக நிர்வாகிகள் ஒருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் சசிகலா பயணம் செய்த காரில் அதிமுக கட்சியின் கொடியை பயன்படுத்தியதாக அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார் மனு அளித்தனர். புகார் மனு அளித்தது பற்றி டிடிவி தினகரன் பேசும்போது அதிமுக அமைச்சர்கள் அனைவரும் பயந்து கொண்டு இது போன்ற காரியங்களை செய்து வருகின்றனர் என கூறினார்.
இந்நிலையில், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் டிடிவி தினகரன் பேச்சுக்கு பதில் அளித்து பேசியதாவது: எதையும் சந்திக்க தயார் என்ற சூழலில்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார். மேலும், தனிக்கொடியோடு, தனிச்சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிமுகவை சொந்தம் கொண்டாடக்கூடாது. எதையும் சந்திக்கத் தயார் என்ற சூழலில்தான் முதலமைச்சர் ஆட்சி நடத்தி வருகிறார் என்று கூறியுள்ளார்.
தற்போது அமைச்சர் மணியன் பேச்சு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மற்ற அமைச்சர்கள் யாரும் கருத்து சொல்லவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் தற்போது அமைச்சர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.