ஜெயலலிதா நினைவிடம்: முதலமைச்சர் திடீர் ஆய்வு - ஏன்?
ஜெயலலிதா நினைவிடம்: முதலமைச்சர் திடீர் ஆய்வு - ஏன்?

By : Kathir Webdesk

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை, மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தமிழக அரசு சார்பில், ரூ.79 கோடி மதிப்பீட்டில், ஃபீனிக்ஸ் பறவை போன்று நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

நினைவிடத்தின் கட்டுமான பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இதனையொட்டி வருகின்ற 27ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைக்கின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தை பார்வையிட்டனர்.
அவர்களுடன் அமைச்சர்கள் மற்றும் தமிழக உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். நினைவிடம் திறக்கும்போது என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.
