Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க. பற்றி பேச முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தகுதியிருக்கு: அண்ணாமலை!

பா.ஜ.க. பற்றி பேச முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தகுதியிருக்கு: அண்ணாமலை!
X

ThangaveluBy : Thangavelu

  |  14 April 2022 1:43 AM GMT

பாஜகவிற்கு பற்றி பேசுவற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தகுதியிருக்கு என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டசபையின்போது அதிமுக எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பேசும்போது, திராவிட இயக்கங்கள் மட்டுமே தமிழகத்தை ஆட்சி செய்யும். மற்ற யாரும் ஆள முடியாது என்றார்.

இந்நிலையில், கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பேசும்போது, திராவிட இயக்கம் என்பதற்கு தனக்கு விளக்கம் தேவை. அதே சமயம் நானும் திராவிடன்தான். அதே சமயம் அதிமுக, திமுகவில் இருப்பவர்கள் எனது உறவினர்கள்தான்.

மேலும், பாஜக தமிழகத்தில் வரஉள்ள சட்டமன்ற தேர்தலின்போது 150 தொகுதிகளை பிடிக்கும். பாஜக பற்றி பேசுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தகுதி உள்ளது. மேலும், எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News