பிரச்சாரம் தொடங்கும் முன்னர் கோனியம்மன் கோயிலில் முதலமைச்சர் சாமி தரிசனம்.!
பிரச்சாரம் தொடங்கும் முன்னர் கோனியம்மன் கோயிலில் முதலமைச்சர் சாமி தரிசனம்.!

தேர்தல் பரப்புரைக்காக கோவைக்கு சென்றிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை கோனியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி அ.தி.மு.க. தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் முன்கூட்டியே தங்களது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது.
இந்நிலையில், அ.தி.மு.க. சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையில் இன்று கோவை மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறார். அதில் முதல் கட்டமாக டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் டவுன்ஹால் பகுதியில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.