தீபாவளிக்கு வாழ்த்து கூறாத முதலமைச்சர் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ! - மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!
தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து கூறாத முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
By : Thangavelu
தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து கூறாத முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். ராமேஸ்வரத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களை தரை, ரயில் மற்றும் வான்வழி போக்குவரத்து மூலமாக இணைப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கான கட்டமைப்புகளும் ஏற்கனவே முடிந்துள்ளது.
மேலும், தீபாவளி பரிசாக எரிபொருளுக்கான விலையையும் பிரதமர் மோடி குறைத்துள்ளார். பாஜக ஆளுகின்ற அனைத்து மாநிலங்களிலும் வாட் வரியை குறைக்கப்பட்டுள்ளது. நமது அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் வாட்வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் எரிபொருளுக்கு விலை குறைப்பதாக பொய்யான வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது வாட் வரியை குறைக்காமல் பொதுமக்களை ஏமாற்றுவது, கண்டனத்துக்குரியது.
மேலும், பிற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் ஸ்டாலின் பெரும்பான்மையான இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி பண்டிக்கைக்கு வாழ்த்து சொல்லாமல் புறக்கணித்து, நவீன தீண்டாமையை புகுத்தியுள்ளார். இதற்காக ஸ்டாலின் இந்துக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Source, Image Courtesy: Twiter