Kathir News
Begin typing your search above and press return to search.

கருத்துக்கணிப்பில் பின்தங்கிய முதல்வர் ஸ்டாலின் - தி.மு.கவின் அதிகார ஆட்சியில் அதிருப்தியில் மக்கள் | விழிக்கும் தி.மு.க

திராவிட மாடல் என திமுகவினரால் புகழப்பட்டு வரும் மு.க.ஸ்டாலின் ஆட்சி கடந்த முறை கருத்துக்கணிப்பில் பெற்ற

கருத்துக்கணிப்பில் பின்தங்கிய முதல்வர் ஸ்டாலின் - தி.மு.கவின் அதிகார ஆட்சியில் அதிருப்தியில் மக்கள் | விழிக்கும் தி.மு.க

Mohan RajBy : Mohan Raj

  |  30 Jan 2023 3:04 AM GMT

திராவிட மாடல் என திமுகவினரால் புகழப்பட்டு வரும் மு.க.ஸ்டாலின் ஆட்சி கடந்த முறை கருத்துக்கணிப்பில் பெற்ற சதவீதத்தை விட இந்த முறை கருத்துக்கணிப்பில் 14 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் நிறைவடைய போகின்றன. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் 505 வாக்குறுதிகளை கொடுத்து, மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து முதன்முறையாக முதலமைச்சரானார் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்போம் எனவும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்ஊதிய முறையை அமல்படுத்துவோம் எனவும், மேலும் தமிழகம் எங்கும் மதுவிலக்கு அமல் படுத்துவோம் என்பது போன்ற பல்வேறு கவர்ச்சி வாக்குறுதிகளை கொடுத்தும் தேர்தல் வியூக நிறுவனர் பிரசாந்த் கிஷோருக்கு கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் அளவில் செலவு செய்து அனைத்து மீடியாக்களிலும் விளம்பரம் செய்தும், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பெருமளவில் விளம்பரம் செய்து ஆட்சியைப் பிடித்தனர். திமுகவினர்.

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்த காரணத்தினாலும், அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு பிறகு பெரிய தலைமை அமையவில்லை என்ற காரணத்தினாலும், முதன்முறையாக திமுகவின் தலைவர் ஸ்டாலின் முதல்வராகிறார் என்ற காரணத்தினாலும்1 இன்னும் பல அரசியல் சூழ்நிலைகள் காரணமாக மக்கள் அதிமுகவை தவிர்த்து திமுகவிற்கு வாக்களித்தனர் இருப்பினும் திமுக அதிமுக'வை விட பெற்ற வாக்கு சதவீதம் இரண்டு சதவீதம் மட்டுமே.

இருப்பினும் திமுக ஆட்சியை கைப்பற்றியது திமுக ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற போகிறது என்ற மக்கள் மகிழ்ச்சியில் இருந்து நிலையில் திமுக தன் வேலையை காட்ட துவங்கியது! வாக்குறுதிகள் மறக்கடிக்கப்பட்டன, ஆட்சிக்கு வந்த கையோடு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது, சொத்து வரி உயர்த்தப்பட்டது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என கூறிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை! குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் என கொடுத்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

முதியோர் ஓய்வூதிய தொகையும் மெல்ல மெல்ல நிறுத்தப்பட்டது, அரசு ஊழியர்களுக்கு சலுகை அளிப்போம் என கூறியதும் அறிவிக்காமலே விட்டுவிட்டனர். மருத்துவர்கள், ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், செவிலியர்கள் என அனைத்து தரப்பு அரசு ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கி திமுக அரசிடம் எங்கே வாக்குறுதி என கேட்கும் நிலை உருவானது.

இது எல்லாவற்றையும் தாண்டி திமுகவை எதனால் கடந்த காலங்களில் ஆட்சியில் அமர்த்தாமல் மக்கள் ஒதுக்கி வைத்திருந்தார்களோ அதே போன்று மீண்டும் விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குடும்ப அரசியல், திரையுலகம் ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு, ஊழல் போன்ற திமுகவின் அனைத்து சாராம்சங்களும் மீண்டும் தலையெடுக்க ஆரமித்தது.

இது மட்டுமில்லாமல் குடும்ப அரசியலில் ஆட்சி நடந்துகொண்டிருக்க ஒருபுறம் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் தனி லாபி செய்ய, மறுபுறம் திரைத்துறை மற்றும் அமைச்சரவையில் முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தனி லாபி செய்துகொண்டிருக்கிறார், இவை எல்லாம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திகையில் பட்டியலின மக்களுக்கு நாங்கள் தான் பாதுகாவலர் என கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த திமுக முதல் ஆங்கங்கே பட்டியலின மக்கள் தாக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் இருப்பதும், புதுக்கோட்டையில் நடந்த தண்ணீர் தொட்டி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் பட்டியல் இனத்தவர்கள் மத்தியில் திமுக அரசு மீது மேலும் கோபம் ஏற்படுத்தியது.

இது இப்படி இருக்கையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பணிகளை கவனிக்காமல் மக்களுடன் என்று செல்பி எடுப்பதையும், திராவிட மாடல் ஆட்சி என கூறுவதையும், பாஜகவை எதிர்ப்பதும் அரசியல் எனவே நினைத்து செய்து வருவதால் மக்களை மேலும் கோபமடைய செய்தது.

இந்த நிலையில் இந்தியா டுடே பத்திரிக்கையை நடத்திய 'மூட் ஆப் தி நேசன்; கருத்துக்கணிப்பில் கடந்த முறை 60.6% பெற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த முறை 45.7% பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். கிட்டத்தட்ட 14.9% மக்கள் ஸ்டாலினுக்கு ஆதரவு தருவதை குறைத்து குறைத்துக் கொண்டுள்ளனர். அதாவது ஆயிரம் பேரிடம் ஸ்டாலின் ஆட்சி பற்றி கருத்து கேட்டார் அதில் வெறும் 450 பேர் மட்டுமே ஸ்டாலின் ஆட்சி சிறந்தது எனக்கு கூறியுள்ளனர், மீதமுள்ள பெருவாரியான 650 பேர் ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக இல்லை எனக் கூறியது தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கடந்த முறை 60% பெற்று முன்னணியில் இருந்த முதல்வர் ஸ்டாலின் தற்பொழுது பின்னடைவை சந்தித்துள்ளார் அப்டின்றதும் குறிப்பிடத்தக்கது.

ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களிலேயே பெருவாரியான மக்களின் அதிர்ச்சியை பெற்ற முதல்வர் என்ற பெயரை எடுத்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின். இது இப்படியாக தொடரும் பட்சத்தில் 2024 தேர்தலில் தமிழகம் கடந்த முறை பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது இந்த முறை மோடி அதிருப்தி தமிழகத்தில் நிலவவில்லை மாறாக ஸ்டாலின் அதிருப்தி தமிழகத்தில் நிலவுகிறது!

இது இப்படி இருக்கையில் வரும் 2024 தேர்தல் திமுகவிற்கு பெரிய அடியும் பாஜகவிற்கு பெரும் எழுச்சியும் உண்டாகும் என தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News