Begin typing your search above and press return to search.
அமைச்சர்கள் சென்னைக்கு வர அவசர உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர்!
அமைச்சர்கள் சென்னைக்கு வர அவசர உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர்!
By : Kathir Webdesk
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற 22ம் தேதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதே போன்று அ.தி.மு.க.விலும் தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம் என தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
மேலும், சட்டபேரவை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பன பற்றி ஆலோசிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளார். அதற்காக வருகின்ற 22ம் தேதி அனைத்து அமைச்சர்களும் சென்னைக்கு வருவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் சசிகலா சிறையில் இருந்து வெளியில் வருவது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பது குறித்து விரிவாக இந்த ஆலோசனையில் பேசப்படலாம் என கூறப்படுகிறது.
Next Story