Kathir News
Begin typing your search above and press return to search.

நேபாள அரசியல் கொந்தளிப்பு.. திரைமறைவில் இருந்து காய் நகர்த்தும் சீனா.!

நேபாள அரசியல் கொந்தளிப்பு.. திரைமறைவில் இருந்து காய் நகர்த்தும் சீனா.!

நேபாள அரசியல் கொந்தளிப்பு.. திரைமறைவில் இருந்து காய் நகர்த்தும் சீனா.!

Saffron MomBy : Saffron Mom

  |  2 Jan 2021 5:02 PM GMT

சீனா பல நாட்டு அரசியலிலும், பொருளாதாரத்திலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தலையிட்டு வருவது தெரிந்த விஷயம். நமது அண்டை நாடான நேபாளத்தில், சீனா வெளிப்படையாகத் தலையிட ஆரம்பித்த நாளிலிருந்து அந்நாடு பல புரட்சிகளையும், மாற்றங்களையும், நிலையற்ற தன்மையையும் பெற்று ஒரு கொந்தளிப்பின் நடுவிலேயே உள்ளது.

தற்பொழுது இந்திய-நேபாள உறவை குலைக்க வேண்டுமென்ற நோக்கில், நேபாள அரசியலில் சீனா தலையிட்டதால் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கு பிரச்சினைகள் உருவாகி, பிறகு அதுவே சீனாவிற்கு பாதகமாக திரும்பி தற்போது நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உடைந்து, ஆட்சி கலைந்து மக்கள் தெருவில் பலவித காரணங்களுக்காக போராட்டத்தில் குதித்த நிலைமை ஏற்பட்டு ஒரு அரசியல் ஸ்திரமற்ற தன்மை நிலவி வருகிறது.

இந்நிலையில் நேபாள அரசியலில் தலையிடும் முயற்சிகளை சீனா நிறுத்தவில்லை. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இதற்காகவே மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை சீனா நிலை நிறுத்தியுள்ளது. இது நேபாள அரசியல்வாதிகளைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருவதாக விவரங்களை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியுறவுத்துறை துணைத் தலைவர் குவோ ஏசோவு தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவை சீன அதிபர் ஜீ ஜின்பிங் நேபாளத்திற்கு அனுப்பி இருந்தார். இது மீடியாக்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

பிரதமர் கேபி சர்மா ஓலி மற்றும் முன்னாள் பிரதமர்கள் புஷ்ப கமல் டஹல் மற்றும் மாதவ் நேபாளம் தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் சில பிரிவுகளை ஒன்று இணைக்கும் நோக்கத்துடன் இந்த சீன குழு சென்றது .ஆனால் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் இக்குழு புதன்கிழமையுடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டது.

இந்தக் குழு, சமீபத்தில் நேபாள பிரதமர் அந்நாட்டு பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதிக்கு அனுப்பிய பரிந்துரையை வாபஸ் பெறவேண்டும் என்று அவரை வலியுறுத்தவும் அல்லது விரைவில் வரவிருக்கும் நேபாள பாராளுமன்ற தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் இரு பிரிவினரையும் ஒன்று சேர்த்து போட்டியிட வைக்க வேண்டும் என்ற முயற்சியுடனும் சென்றது. மூன்றாவது யோசனையாக, அந்நாட்டு உச்சநீதிமன்றம் இந்த பாராளுமன்ற கலைப்பை ரத்து செய்துவிட்டால் ஏதேனும் ஒரு கம்யூனிஸ்ட் பிரிவுடன் எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கொண்டு ஆட்சி அமைக்க முடியுமா என்ற வாய்ப்புகளையும் ஆராய சென்றதாக கூறப்படுகிறது.

இந்த மூன்றாவது வாய்ப்பில் பிரதமர் ஓலிக்கு இடமில்லை. ஆனால் நேபாள அரசியலை கூர்ந்து கவனித்து வருபவர்கள் கூறுகையில் இந்த உயர்மட்டக்குழு சீனாவின் வெளிப்படையான முயற்சிகளுக்கு ஒருமுகமாக மட்டுமே இருப்பதாகவும், மறைமுகமாகவும் திரைக்குப் பின்னணியிலும் சீனாவின் பல முயற்சிகள் தொடர்ந்து வருவதாகவும் கூறுகின்றனர்.

இப்போதைக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்று அதிகாரிகளிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழு வெளிப்படையான தகவல்கள் எதுவும் இல்லாமல் சீனாவில் இருந்து நேபாளத்திற்கு சாலை வழியாக சென்று காத்மன்ட் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சேகுன் லாய், டோங்மே ஹுவாங், யோங்கிலின் ஜோங், ஜாப் என்ற மூன்று பேரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான நபர்கள். இவர்கள் நேபாளத்தில் அரசியல் தலைவர்களை பல வருடங்கள் வளர்த்து விட்டதாக கூறப்படுகிறது. வெளிப்படையாக அந்த அளவிற்கு தெரியாமல் பின்னணியில் தனது முயற்சிகளை சீனா தொடர்வதாக நேபாளத்தைச் சேர்ந்த தூதுவர் ஒருவர் தெரிவித்தார்.

இப்படி வெளிப்படையாக அல்லாமல் மறைமுகமாக சீனா தனது பாணியை மாற்றிக் கொண்டதற்கு காரணம், சீனாவின் தலையீடு நேபாளத்தில் அதிகப்படியாக இருப்பதாக அந்நாட்டு அரசியல் மற்றும் மக்கள் மத்தியில் ஒரு எரிச்சல் கிளம்பியதே ஆகும். வெளிப்படையாகச் சென்ற நான்கு பேர் புதன்கிழமை அன்று சீனாவிற்கு திரும்புவதற்கு முன்பு, நேபாள தலைநகரில் பலரும் சீன குழுவினரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Nepal Protests

சீனா கூறுகையில், இந்த 4 பேரும் நேபாள விவகாரங்களில் தலையிட செல்லவில்லை என்றும் நேபாள உள்நாட்டு விவகாரங்களை தீர்மானிக்க வேண்டியது நேபாள பொறுப்பு என்றும் நழுவி விட்டனர். இது குறித்து முழுவதுமாக மறுப்பு அறிக்கையும் சீன வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News