Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க காலை வார காத்திருக்கும் கொங்கு மண்டலம் - பலப்படுத்த துரைமுருகன் போராட்டம்

தி.மு.க காலை வார காத்திருக்கும் கொங்கு மண்டலம் - பலப்படுத்த துரைமுருகன் போராட்டம்

தி.மு.க காலை வார காத்திருக்கும் கொங்கு மண்டலம் - பலப்படுத்த துரைமுருகன் போராட்டம்
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Oct 2020 7:24 PM IST

கொங்கு மண்டலம் தி.மு.க'விற்கு தேர்தலில் கை கொடுக்காது என அறிந்த தி.மு.க பொதுசெயலாளர் கொங்கு மண்டலத்தை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தை 4 ஆக பிரித்து தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மாவட்டத்தை, தி.மு.க நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், திருப்பூர் மாநகர், திருப்பூர் வடக்கு, திருப்பூர் கிழக்கு, திருப்பூர் தெற்கு என 4 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது.

அதன்படி, திருப்பூர் மாநகர் மாவட்டத்தில், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் வடக்கு மாவட்டத்தில், அவிநாசி (தனி), பல்லடம், திருப்பூர் கிழக்கு மாவட்டத்தில் காங்கேயம், தாராபுரம் (தனி), திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன.

இந்த 4 மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். திருப்பூர் மாநகர் மாவட்டத்திற்கு க.செல்வராஜ், திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு இல.பத்மநாபன், திருப்பூர் கிழக்கு மாவட்டத்திற்கு மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு இரா.ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்" என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே தி.மு.க'விற்கு மக்கள் மத்தியில் ஊழல் மற்றும் ரவுடியிச கட்சி என்ற பெயர் இருந்து வரும் நிலையில் எப்படியாவது இந்த தேர்தலில் மக்கள் வாக்குகளை பெற்றுவிட துடிக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News