Kathir News
Begin typing your search above and press return to search.

உதயநிதியை 'உதறல்நிதி'யாக மாற்றிய போஸ்டர்கள் - நடுங்கி தவிக்கும் ஸ்டாலின் குடும்பம்!

உதயநிதியை 'உதறல்நிதி'யாக மாற்றிய போஸ்டர்கள் - நடுங்கி தவிக்கும் ஸ்டாலின் குடும்பம்!

உதயநிதியை உதறல்நிதியாக மாற்றிய போஸ்டர்கள் - நடுங்கி தவிக்கும் ஸ்டாலின் குடும்பம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Oct 2020 1:12 PM IST

1980'களில் அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும்போதே தி.மு.க என்றால் அரசியலில் ஒரு புயல். அதன் பொதுக்கூட்டங்களுக்கு சாரை சாரையாக மக்கள் வருவர், சில சமயங்களில் காவல்துறை தடியடி நடத்தும் அளவிற்கு தி.மு.க பேச்சாளர்களின் உரையை கேட்டு கூட்டம் சேரும், இன்னும் சொல்லப்போனால் இன்றைய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், மறைந்த க.சுப்பு மற்றும் சமீபத்தில் மறைந்த ரகுமான்கான் ஆகிய மூவரும் இணைந்து "இடி, மின்னல், மழை" என்ற தலைப்பில் ஊர் ஊராக சென்று உரையாற்றிய கூட்டங்கள் அத்தனைக்கும் ஆளும்கட்சி திணறியது. தி.மு.க மேடைப்பேச்சிற்கு ஆகசிறந்த உதாரணம் இந்த கூட்டங்கள்.

இப்படி பேசி வளர்ந்த தி.மு.க இன்று சில போஸ்டரால் ஆடி போய் இருக்கிறது, அதிலும் குறிப்பாக தி.மு.க-வின் பட்டத்து இளவரசர் உதயநிதியோ இந்த போஸ்டர்கள் மூலம் தி.மு.க-வின் ஆட்சி பீட கனவு உடைந்து சுக்குநூறாக சிதறுவதை கண்டு தூக்கம் தொலைந்து திரிகிறார்.

அப்படி என்ன இருக்கிறது போஸ்டரில்? அரசியல் உலகில் போஸ்டர்கள் சர்வசாதாரணம், குறிப்பாக கண்டன போஸ்டர்கள், எதிரிகளுக்கு சவால் விடும் போஸ்டர்கள், மக்களை கிளர்ச்சயடைய செய்யும் கருத்துக்கள் உடைய போஸ்டர்கள் என விதவிதமான போஸ்டர்களை தமிழக அரசியல் தலைவர்கள் அவர்களது வாழ்விலும், அனுபவத்திலும் நிறைய பார்த்திருப்பார்கள் குறிப்பாக தி.மு.க காணாத எதிர்ப்பு போஸ்டர்களே இருக்காது, அந்தளவிற்கு போஸ்டர் என்பது அரசியலில் சாதாரண நிகழ்வு.

ஆனால் இப்போது சில போஸ்டர்கள் மூலம் தி.மு.க பணத்தை வாரி இறைத்து கட்சி தலைவர் ஸ்டாலினை பெரிய தலைவர் போல கட்டமைத்த பிம்பம் உடைகிறது, மக்கள் மத்தியில் கருணாநிதியின் மகன் என்ற பெயரை வைத்து சுலபமாக நுழைந்த ஸ்டாலினின் சுயரூபங்கள் அப்பட்டமாக தெரிகின்றன.


கோடிகளை கொட்டி, கட்சி நிர்வாகிகளை பணிய வைத்து, விளம்பர படங்களை உருவாக்கி, மீடியாக்களை விலைக்கு வாங்கி, நெறியாளர்களை வளைத்து, இவையெல்லாம் போதாது என பிரசாந்த் கிஷோர் என்னும் வடநாட்டவரை பல கோடிகள் குடுத்து வரவழைத்து ஸ்டாலின் தலைமுடி அமைப்பு முதல் அவரின் நடை உடை பாவனைகளை மாற்றி ஒரு அரசியல் ஆளுமையாக உருவகப்படுத்த முயற்சித்த தி.மு.க-வின் மலையளவு செயல்கள் சில போஸ்டர்கள் மூலம் சுக்குநூறாக உடைவதை கண்டு தூக்கமின்றி தவிக்கின்றது ஸ்டாலினின் குடும்பம்.

இதன் வெளிப்பாடாக உதயநிதியோ கோயமுத்தூர் வரை ஓடிச்சென்று போராட்டத்தில் ஈடுபடுகிறார். கொரோனோ காலகட்டதில் கூட கோயமுத்தூர் வரை ஓடும் அளவிற்கு உதயநிதிக்கு நிம்மதி இன்மையை அளித்துள்ளது அந்த போஸ்டர்கள்.

காரணம் மக்கள் கதாநாயகன் போல எடப்பாடியை சித்தரித்து 'இம்சை அரசன்' பட கதாநாயகனை போல் கையாலாகாத மன்னன் போன்று ஸ்டாலினை சித்தரிக்கும் போஸ்டர்கள் அவை. என்னதான் இணையத்தில் இதுபோன்ற மீம்ஸ்கள் கொட்டி கிடந்தாலும் அது சாமானியனை போய் சேராது. ஆனால், கோவை போன்ற மாநாகரரில் ஒரு வீதியில் ஒட்டப்படும் போஸ்டர் அந்த இடந்தை கடக்கும் மக்களின் பார்வையில் எளிதாக படும் என்ற கவலையே ஆகும்.

ஏற்கனவே "இவரா கருணாநிதி மகன்?" என்ற ஆச்சர்யம் ஸ்டாலின் நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்பட்டிருந்தாலும் அது மனதிற்குள் மட்டுமே. ஆனால், இவ்வித போஸ்டர்கள் அந்த கேள்வியை சர்வசாதாரணமாக மக்களின் விவாத பொருளாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை. இந்த காரணமேதான் உதயநிதியை கோவை வரை ஓடிச்சென்று போராட வைத்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த போஸ்டர்கள் எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில் உதயநிநியே இறங்கி ரோட்டில் போஸ்டரை கிழித்தாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் அந்த போஸ்டர் கூறும் உண்மே சத்திய வார்த்தைகள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News