திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தி.மு.க தலைவர் மகனும் தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர். இளைஞரணி துணைச் செயலாளராக இருந்த இவர் தற்போது திருச்சி மாவட்ட செயலாளராக் உள்ளார்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பொன்மலை அருகில் உள்ள ஆலந்தூரில் ₹6 லட்சம் செலவில் பயணியர் நிழற்குடை நிறுவப்பட்டுள்ளது. இது மகேஷ் பொய்யாமொழியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்டது என்பதால் அதில் எந்த அரசு பொறுப்பிலும் இல்லாத தனது நண்பர் உதயநிதியின் படத்தை பயன்படுத்தியுள்ளார்.
எந்த அரசு பதவியும் இதுவரை வகித்திடாத, தன் தாத்தா, அப்பா பெயரில் கட்சி பொறுப்பு பெற்று உட்கார்ந்துள்ள ஒரு சாதாரண கட்சி நிர்வாகியான உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் அரசு செலவில் அச்சிடப்பட்டுள்ளது கடும் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் சரமாரி கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
அதிகார துஷ்ப்ரயோகத்தின் மறு பெயர் தி.மு.க என சும்மாவா சொன்னாங்க?